உத்தரகோசமங்கையில் முதியோர் உதவித்தொகை பெறுபவர்களிடம் சமூக பாதுகாப்பு


உத்தரகோசமங்கையில் முதியோர் உதவித்தொகை பெறுபவர்களிடம் சமூக பாதுகாப்பு
x
தினத்தந்தி 15 May 2017 12:42 AM IST (Updated: 15 May 2017 12:42 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை பெறுபவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீழக்கரை

தமிழகத்தில் அரசின் சார்பில் முதியவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த உதவித்தொகை சீராய்வு செய்யப்பட்டபோது ஏராளமானோருக்கு விடுபட்டு முதியவர்கள் அவதிப்பட்டு வந்தனர். அதேநேரத்தில் தகுதியில்லாதவர்கள், அரசு வேலை பார்ப்பவர்கள், வசதியானவர்களுக்கு உதவித்தொகை கிடைப்பதாக புகார்களும் எழுந்தது. இவ்வாறு ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏராளமான முதியவர்கள் பாதிக்கப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து உதவித்தொகை கேட்டு மனு கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் முதியோர் உதவித்தொகை பெறுபவர்கள் குறித்து விசாரணை செய்து அந்த பட்டியலை முறைப்படுத்தவும், தகுதி இல்லாதவர்களை நீக்கிவிட்டு, தகுதியானவர்களுக்கு உதவித்தொகை கிடைக்கச்செய்யவும் மாவட்ட கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார். இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரிகள் அந்தந்த பகுதியில் நேரில் முதியோர் உதவித்தொகை பெறுபவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

விவரங்கள் சரிபார்ப்பு

கீழக்கரை தாலுகா உத்தரகோசமங்கை, நல்லிருக்கை மற்றும் ஆலங்குளம் குரூப்புகளில் கீழக்கரை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தமீம்ராசா தலைமையில் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று முதியோர் உதவித்தொகை பெறுபவர்களின் விவரங்களை சரிபார்த்தனர். இந்தபணியில் உத்தரகோசமங்கை வருவாய் ஆய்வாளர் கோகிலா, கிராம நிர்வாக அலுவலர்கள் முனீஸ்வரன், கோகிலாதேவி, கிராம உதவியாளர்கள் பாக்கியவதி, பாண்டி ஆகியோர் ஈடுபட்டுவருகின்றனர்.

Next Story