விமானப்படையில் ஏர்மேன் வேலை இளைஞர்கள் நேரடி நேர்காணலில் பங்கேற்கலாம்

விமானப்படையில் ஏர்மேன் பணிகளுக்கு திருச்சியில் நேரடி நேர்காணல் நடக்கிறது.
விமானப்படை இந்திய ராணுவத்தின் முப்படைப் பிரிவுகளில் ஒன்றாகும். தற்போது இந்த படைப்பிரிவில் ஏர்மேன் (குரூப்-ஒய், நான் டெக்னிக்கல்) பணிகளுக்கு பல்வேறு மண்டலங்களிலும் நேரடி நேர்காணல் மூலம் இளைஞர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். ஆட்டோமொபைல் டெக்னிசியன், கிரவுண்ட் டிரெயினிங் இன்ஸ்ட்ரக்டர், விமானப்படை போலீஸ் போன்ற பணிகளுக்கு தகுதியானவர்கள் இந்த அறிவிப்பின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். தமிழகத்தில் திருச்சிராப்பள்ளி அண்ணா ஸ்டேடியத்தில் இதற்கான ஆட்தேர்வு முகாம் நடைபெற உள்ளது. இதில் இந்திய குடியுரிமை பெற்ற திருமணமாகாத தமிழக இளைஞர்கள் நேரடியாக பங்கேற்கலாம். அவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி தெரிந்து கொள்வோம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 7-7-1997 மற்றும் 20-12-2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி:
மேல்நிலைக்கல்வி, இன்டர்மீடியட் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்கள் ஆங்கிலத்திலும், இதர பாடங்களிலும் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு, வேலைக்குத் தேவையான இதர தகுதிகள் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
நேரடி நேர்காணல் முறையில் நடைபெறும் இந்த ஆட்தேர்வு முகாமிற்கு தேவையான சான்றுகளுடன் நேரில் ஆஜராக வேண்டும். 20-5-2017 மற்றும் 22-5-2017 வரை இதற்கான தேர்வுகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு பகுதியினருக்கும் ஒவ்வொரு தேதியில் தேர்வுகள் நடைபெறுகின்றன. விண்ணப்பதாரர்கள் முழுமையான விளம்பர அறிவிப்பில் என்னென்ன சான்றுகள் கொண்டு செல்ல வேண்டும், எந்த நாளில் தேர்வில் ஆஜராக வேண்டும் என்பது போன்ற விவரங்களை தெளிவாக தெரிந்து கொண்டு நேர்காணலில் பங்கேற்கலாம். இது பற்றிய விவரங்களை www.airmenselection.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Related Tags :
Next Story