பாம்பனில் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

பாம்பனில் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் தாலுகாவுக்கு உட்பட்ட ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய பகுதிகளில் 12 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ராமேசுவரத்தில் செயல்பட்டு வந்த 6 கடைகளும், தங்கச்சிமடத்தில் இயங்கி வந்த 3 கடைகளும் மூடப்பட்டன.
பாம்பனில் மட்டும் 3 கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வந்தன. இதனால் ராமேசுவரம், தங்கச்சிமடத்தை சேர்ந்த மதுப்பிரியர்கள் தினமும் பாம்பனுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச்சென்றனர். இந்த நிலையில் பாம்பனில் உள்ள 3 மதுக்கடைகளையும் அகற்றக்கோரி நேற்று மாதர் சங்கம் சார்பில் இருதயமேரி, மோட்சராகிணி, முன்னாள் ஊராட்சி தலைவர் பேட்ரிக், சமூக ஆர்வலர் தில்லைபாக்கியம் ஆகியோர் தலைமையில் ஏராளமான ஆண்களும், பெண்களும் பாம்பன் புளியமரம் பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்ததும் ராமேசுவரம் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) காந்திமதிநாதன் தலைமையிலான போலீசாரும், தாசில்தார் கணேசன் மற்றும் வருவாய்த்துறையினரும் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது:- வருகிற 1-ந்தேதிக்குள் பாம்பனில் உள்ள 3 டாஸ்மாக் மதுக்கடைகளும் அகற்றப்படாவிட்டால் கடைகள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவோம். மக்களை திரட்டி பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவதுடன் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைகளையும் சூறையாடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story