பெரம்பூரில் மெத்தை தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து

பெரம்பூரில் மெத்தை தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது.
பெரம்பூர்,
சென்னை பெரம்பூர் வீனஸில் திம்மசாமி தர்கா தெருவில் முகமது ரசிக் (வயது 60) என்பவருக்கு சொந்தமான மெத்தை தயாரிக்கும் கம்பெனி உள்ளது. இங்கு பழைய மற்றும் புதிய பஞ்சுகளை கொண்டு மெத்தை தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று மதியம் கம்பெனியில் வழக்கம் போல் ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். திடீரென மோட்டார் அறையில் இருந்து புகை வந்தது. அங்கு சென்று பார்ப்பதற்குள் புகை வந்த இடத்தில் தீப்பிடித்து எரியத்தொடங்கியது.
போராடி அணைத்தனர்
தீயை அணைக்க ஊழியர்கள் முயற்சி செய்தனர். ஆனால் பஞ்சுகள் என்பதால் தீ மளமளவென கம்பெனி முழுவதும் பரவியது. அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அனைவரும் வெளியே ஓடி வந்தனர். உடனடியாக இதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் செம்பியம் தீயணைப்பு நிலைய வீரர்கள் 2 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சுமார் 1½ மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
மின் கசிவு காரணமா?
எனினும் தீ விபத்தில் கம்பெனியில் மெத்தை தயாரிக்க வைத்து இருந்த பஞ்சுகள், விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த மெத்தைகள் மற்றும் கம்பெனி ஊழியர்களின் 4 மோட்டார் சைக்கிள்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது.
தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுபற்றி செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story