குறுவைசாகுபடிக்கு சிறப்பு தொகுப்பு திட்டத்தை முதல்-அமைச்சர் விரைவில் அறிவிப்பார்

குறுவை சாகுபடிக்கு சிறப்பு தொகுப்பு திட்டத்தை முதல்-அமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்று வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.
தஞ்சாவூர்,
தஞ்சையில் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி உள்ளது. தஞ்சையை ஆண்ட மாமன்னனர் ராஜராஜசோழனின் சகோதரி குந்தவைநாச்சியார் பெயரில் இந்த கல்லூரி தொடங்கப்பட்டு 50 ஆண்டு நிறைவு செய்யப்பட்டது. இந்த பொன்விழா ஆண்டு நிறைவையொட்டி குந்தவை நாச்சியாருக்கு கல்லூரி வளாகத்தில் சிலை அமைக்கப்பட்டது. ரூ.3 லட்சம் செலவில் கிரானைட் கல்லால் அமைக்கப்பட்டு இந்த சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினர். எம்.பி.க்கள் வைத்திலிங்கம், பரசுராமன், பாரதிமோகன், கல்லூரி கல்வி இயக்குனர் பியாட்ரிஸ் மார்க்ரெட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் நிர்மலா வரவேற்றார்.
அமைச்சர் துரைக்கண்ணு
விழாவில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக் கண்ணு கலந்து கொண்டு குந்தவை நாச்சியார் சிலையை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் குந்தவை நாச்சியாரை போற்றுகிற வகையில் அவருக்கு திருஉருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக நிதித்துறை செயலாளர், வேளாண்மைத்துறை அதிகாரிகளை அழைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி உள்ளார்.
தூர்வாரும் பணி
குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தை எவ்வாறு, எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து இந்த ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. எனவே விரைவில் குறுவைசாகுபடிக்கான சிறப்பு தொகுப்புதிட்டத்தை முதல்-அமைச்சர் அறிவிப்பார். மேட்டூர் அணையில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்கள் படிப்படியாக தூர்வாரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் ரெங்கசாமி, கோவிந்தராஜ், சேகர், பால்வள தலைவர் காந்தி, கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், நிலவள வங்கி தலைவர் துரை.வீரணன், முன்னாள் கல்லூரி முதல்வர் லட்சுமி, இயற்பியல் துறை பேராசிரியை கேத்தரின்விமலா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் தமிழ்த்துறை பேராசிரியர் திராவிடராணி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story