உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தரம் பிரித்து குப்பைகள் வாங்கும் நிகழ்ச்சி


உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தரம் பிரித்து குப்பைகள் வாங்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 6 Jun 2017 3:17 AM IST (Updated: 6 Jun 2017 3:17 AM IST)
t-max-icont-min-icon

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தரம் பிரித்து குப்பைகள் வாங்கும் நிகழ்ச்சி

கூத்தாநல்லூர்,

கூத்தாநல்லூர் நகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி குப்பைகளை தரம் பிரித்து மக்களிடம் சென்று வாங்கும் திட்டத்தினை முதற்கட்டமாக 16-வது வார்ட்டில் நகராட்சி ஆணையர் புவனேஸ்வரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு நகராட்சி பொறியாளர் சந்திரசேகரன், சுகாதார ஆய்வாளர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கூத்தாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் பசீர்அகமது, முன்னாள் நகரசபை துணைத்தலைவர் முகமதுஅஷ்ரப், சுகாதார மேற்பார்வையாளர் வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைத்து வார்டுகளிலும் தரம் பிரித்து குப்பைகள் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் நகராட்சியின் சார்பில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு நாடகம் நடந்தது. 

Next Story