திருப்பூரில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் பங்கேற்றார்

திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கலந்து கொண்டார்.
திருப்பூர்,
திருப்பூர் மாநகர இந்து முன்னணி சார்பில் நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகரில் சட்டவிரோதமாக கட்டப்படும் தொழுகை கூடங்களை தடை செய்ய வேண்டியும், சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்காளதேச நாட்டினரை வெளியேற்ற வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
மாநில செயலாளர் கிஷோர்குமார் பேசியதாவது:-
பனியன் நகரான திருப்பூரில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த மக்கள் குடும்பத்தோடு தங்கியிருந்து பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வருகிறார்கள். வந்தாருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் இடமாக திருப்பூர் விளங்கி வருகிறது. தொழிலாளர்கள் என்ற போர்வையில் சட்டவிரோதமாக எந்த வித ஆவணங்களும் இன்றி வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்கள் திருப்பூரில் பதுங்கி இருந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் பாஸ்போர்ட், ரேஷன் கார்டு போன்றவற்றை முறைகேடாக பெற்றுள்ளனர்.
தொடர்ந்து எச்சரிக்கை
மங்கலம் ரோடு கோழிப்பண்ணை பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதி பதுங்கியிருந்து மளிகை கடை நடத்தினான். அவனை மத்திய போலீசார் கைது செய்தனர். ஆனால் உள்ளூர் போலீசாருக்கு இதுபற்றி தெரியவில்லை. இதுபோல் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் திருப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூரின் பாதுகாப்பு குறித்து இந்து முன்னணி தொடர்ந்து எச்சரித்து வருகிறது. திருப்பூரில் தனி பாதுகாப்பு படையை உருவாக்க வேண்டும். வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்கள் பதுங்குவதற்கும் குடியேறுவதற்கும் வாய்ப்பான சூழல் உருவாகி உள்ளது. குருவாயூரப்பன் நகரில் இந்துக்களின் வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் இடங்களில் புதிதாக தொழுகை கூடங்கள் கட்ட அனுமதிக்கக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
கலெக்டரிடம் மனு
ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் தாமு வெங்கடேசன், கோட்ட செயலாளர் சேவுகன், மாவட்ட தலைவர் அண்ணாத்துரை, பொதுச்செயலாளர் கிருஷ்ணன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு தண்ணீர் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. தண்ணீர் குடித்து முடித்ததும் அந்த பாக்கெட்டுகள் ரோட்டில் கிடந்தன. ஆர்ப்பாட்டம் முடிந்ததும் காலி பாக்கெட்டுகளை அனைவரும் எடுத்து குப்பை தொட்டியில் போட்டு அந்த இடத்தை தூய்மை செய்து விட்டு சென்றனர்.
பின்னர் இந்து முன்னணி நிர்வாகிகள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் நேரில் கொடுத்து முறையிட்டனர்.

Related Tags :
Next Story