சிவகிரி அருகே கடைகள்–வீடு எரிந்து நாசம்

சிவகிரி அருகே கடைகள்–வீடு எரிந்து நாசம்
சிவகிரி,
சிவகிரி அம்மன்கோவில் கிராமத்தில் உள்ள பஸ்நிறுத்தம் அருகே, நேற்று முன்தினம் இரவு பிரபாகரன் என்பவரின் காய்கறி கடையில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென அருகே உள்ள சலவை கடை, ஜவுளி கடை மற்றும் அருகே இருந்த வீட்டுக்குள்ளும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் கொடுமுடி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தார்கள். ஆனாலும் வீடு மற்றும் கடைகளில் இருந்த கணினி, துணிகள், சமையல் பொருட்கள் என அனைத்தும் எரிந்து சாம்பலானது. தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
தீ விபத்தின் பாதிப்புகளை வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி, கிராம நிர்வாக அதிகாரி பானுமதி ஆகியோர் ஆய்வு செய்தார்கள்.

Related Tags :
Next Story