சேர்வலாறு அணை பராமரிப்பு பணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு


சேர்வலாறு அணை பராமரிப்பு பணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு
x
தினத்தந்தி 2 July 2017 2:30 AM IST (Updated: 1 July 2017 9:03 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டம் சேர்வலாறு அணையில் கடந்த 28–ந் தேதி 61.15 அடியாக இருந்த நீர்மட்டம், 29–ந் தேதி 47.90 அடியாக குறைக்கப்பட்டது.

விக்கிரமசிங்கபுரம்,

நெல்லை மாவட்டம் சேர்வலாறு அணையில் கடந்த 28–ந் தேதி 61.15 அடியாக இருந்த நீர்மட்டம், 29–ந் தேதி 47.90 அடியாக குறைக்கப்பட்டது. 13 அடி வரையிலான தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. அதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணை பராமரிப்பு பணிகள் காரணமாகவே தண்ணீரை திறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுசம்பந்தமாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று சேர்வலாறு அணையை பார்வையிட சென்றார். அங்கு நடந்து வரும் அணை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், சேர்வலாறு அணையில் ரூ.8 கோடியில் அணை பராமரிப்பு பணிகளும், ரூ.15 கோடியில் மதகு பராமரிப்பு பணிகளும் நடந்து வருகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. மேலும் பராமரிப்பு பணிகளை முன்னிட்டு இங்குள்ள தண்ணீரை பாபநாசம் அணைக்கு கொண்டு செல்வதற்கான வழிகள் உள்ளதா என்றும் ஆய்வு செய்யப்படுகிறது என்றார்.

ஆய்வின் போது, சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ், மேற்பார்வை பொறியாளர் ஜான் கென்னடி, மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன், முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஜெபராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.


Next Story