புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட சம்பவம்: புதுப்பெண், கள்ளக்காதலன் கைது

புதுமாப்பிள்ளை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக புதுப்பெண் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் சக்கரக்கோட்டை அருகே உள்ள அம்மன்கோவில் பகுதியில் கடந்த 22-ந் தேதி ராமநாதபுரம் ஓம்சக்திநகர் 8-வது தெருவை சேர்ந்த சோனைக்குமார் மகன் கணேஷ்குமார்(வயது32) என்பவர் கழுத்து அறுபட்ட நிலையில் கொலைசெய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி கேணிக் கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இவருக்கும் மண்டபம் சமத்துவ புரத்தை சேர்ந்த சுந்தரம் என்பவருடைய மகள் பாக்கியலட்சுமி(27) என்பவருக்கும் கடந்த மாதம் 11-ந் தேதி திருமணம் நடந்துள்ளது தெரியவந்தது. திருமணமாகி 21 நாட்களில் இந்த கொலை நடந்துள்ளதால் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டனர். இந்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன.
திருமணமான 21 நாளில் புதுமாப்பிள்ளை காணாமல் போனதை பெரிதுபடுத்தாமல் புதுப்பெண் பாக்கியலட்சுமி அலட்சியமாக இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் உள்ள மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்த பாக்கியலட்சுமியின் செல்போன் எண்களை ஆராய்ந்து பார்த்தபோது அவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு எண்ணில் அதிக நேரம் பலமுறை பேசியிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் பாக்கிய லட்சுமியிடம் விசாரணை செய்தனர்.
அப்போது அவர், மாமன் மகனான ராமநாதபுரம் காந்திநகர் பகுதியை சேர்ந்த லோகநாதன்(22) என்பவரை காதலித்து வந்ததாகவும், பெற்றோர் வற்புறுத்தியதால் கணேஷ்குமாரை திருமணம் செய்து கொண்டதாகவும் லோகநாதனை மறக்க முடியாமல் தவித்து வந்ததால் அவருடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய முடிவு செய்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ராமநாதபுரம் சேதுபதி நகர் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் மேலாளராக வேலைபார்த்து வந்த லோகநாதனை போலீசார் பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையில் அவர் கூறியதாவது:- தாய்மாமன் மகளான பாக்கியலட்சுமியும் நானும்ம் நீண்டகாலமாக காதலித்து வந்தோம். இருவருக்கும் வயது வித்தியாசம் இருந்ததால் திருமணம் செய்து கொள்ள வீட்டினர் சம்மதிக்கவில்லை. இந்தநிலையில் வற்புறுத்தி பாக்கியலட்சுமியின் வீட்டில் மாப்பிள்ளை பார்த்து கணேஷ்குமாரை திருமணம் செய்து வைத்தனர்.
இதனால் அவர்களுக்குள் லேசான மனக்கசப்பு ஏற்பட்டது. மலேசியாவில் இருந்து வந்துள்ள கணேஷ்குமார் மதுரையில் வேலை பார்க்க முடிவு செய்திருந்தார். இதற்காக அவர் வெளியில் சென்றிருந்த சமயம் அடிக்கடி வீட்டிற்கு சென்று பாக்கியலட்சுமியை கள்ளத்தனமாக சந்தித்து வந்தேன். இவ்வாறு கடந்த 20-ந் தேதி நானும், பாக்கியலட்சுமியும் சந்தித்த போது எங்களின் வாழ்க்கை இவ்வாறு அமைந்துவிட்டதே என்று கலங்கினோம். இருவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமானால் அதற்கு கணேஷ்குமார் தடையாக இருக்க கூடாது என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம்.
இதன்படி கணேஷ்குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து அதற்கான நேரம் பார்த்து காத்திருந்தேன். இதற்கு ஏற்ப கடந்த 21-ந் தேதி கணேஷ்குமார் தனது செல்போனை பழுது பார்க்க வேண்டும் என்று கூறினார். இதற்காக அவரை புதிய பஸ் நிலையம் பகுதிக்கு வருமாறு கூறி அங்கு சென்று காத்திருந்தேன். அப்போது அவர் சக்கரக்கோட்டை மதுக்கடையில் இருப்பதாகவும் அங்கு வருமாறும் கூறினார். இதனால் அங்கு சென்று இருவரும் மதுஅருந்தினோம். இதன்பின் அங்கிருந்து மேலும் மது வாங்கி கொண்டு அம்மன்கோவில் பகுதிக்கு சென்று இரவு 11 மணி அளவில் மது அருந்தினோம். அங்கு மது மயக்கத்தில் கீழே கிடந்த கணேஷ்குமாரை இதுதான் சமயம் என்று கருதி மோட்டார்சைக்கிளில் வைத்திருந்த கத்தியால் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தேன். இதன்பின்னர் கத்தியை வீசிவிட்டு மது அருந்துவதற்காக வாங்கிச் சென்ற குளிர்பானத்தில் கையை சுத்தம்செய்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதுமாப்பிள்ளை கணேஷ்குமார் மலேசியாவில் இருந்து வந்ததும் மீண்டும் வெளிநாடு செல்லவில்லை என்றும், மதுரையில் வேலைக்கு செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். இதனால் மதுரைக்கு வேலை தேடி சென்றிருக்கலாம் என்று அவருடைய வீட்டினர் கருதி உள்ளனர். மேலும், செல்போன் பழுதாகி இருப்பதாக அவர், கூறியிருந்ததால் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் போனது புதுப்பெண்ணுக்கும் அவருடைய கள்ளக்காதலனுக்கும் சாதகமாக இருந்துள்ளது. இந்த கொலை சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாக்கியலட்சுமி, அவருடைய கள்ளக்காதலன் வாலிபர் லோகநாதன் ஆகியோரை கைது செய்தனர்.

Related Tags :
Next Story