குடிநீர் வசதி கேட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர்

குடிநீர் வசதி கேட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் திரண்டு வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.
கரூர்,
கரூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் அரவக்குறிச்சி தாலுகா சூரப்பநாயக்கனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், தங்களது கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டு, 60 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. பக்கத்து கிராமத்திற்கு சென்று தண்ணீர் பிடித்து வரவேண்டிய நிலை உள்ளது. குடிநீர் வசதி இல்லாமல் பெரும் சிரமம் அடைந்து வருகின்றோம். அதனால் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இதேபோல அரவக்குறிச்சி வடுநாகம்பள்ளி கிராம மக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில் எங்கள் பகுதியில் 6 மாதங்களாக குடிநீர் வரவில்லை எனவும், குடிநீர் வசதி ஏற்படுத்தி தரக்கோரியும், தெருவிளக்கு வசதி அமைத்து தரவும், மயான பாதைக்கு நடைபாதை அமைத்து தரக்கோரியும் தெரிவித்திருந்தனர். வெள்ளியணை வடபாகம் கிருஷ்ணாரெட்டியூர் பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்களில் தகுதி உள்ளவர்களுக்கு மாட்டு கொட்டகை போட அனுமதி வழங்க வேண்டும் என சங்க உறுப்பினர்கள் மனு கொடுத்தனர்.
இதேபோல அரவக்குறிச்சி ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் கலையரசன் தலைமையில் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், “அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி 1958-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பள்ளியில் தொழிற்கல்வியில் வேளாண் பாடப்பிரிவில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் கடந்த மே மாதம் பணி ஓய்வு பெற்றார். பணி ஓய்வினால் அந்த பிரிவில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 வகுப்பில் 40 பேர் படித்து வருகின்றனர். வேளாண் பாடப்பிரிவை படித்த மாணவ- மாணவிகள் பலர் அரசு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். எனவே மாணவ- மாணவிகளின் எதிர்கால நலன் கருதி அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் வேளாண் பாடப்பிரிவில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கிடவும், சம்பந்தப்பட்ட பிரிவுக்கு ஆசிரியரை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
ஓடமுடையாளர்பாளையம் பகுதியை சேர்ந்த மீனவர்களும், முதியவர்களும் பலர் வந்து மனு கொடுத்தனர். அமராவதி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் மீன்பிடி தொழில் இல்லாமல் உள்ளது. இதனால் வறுமையில் வாடுகிறோம். வயதான முதியவர்களுக்கு முதியோர் ஓய்வூதிய தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர்.
மணவாசி சமத்துவபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், வீடுகளுக்கு நத்தம் பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
எய்ம்ஸ் மருத்துவமனை
அரவக்குறிச்சி அருகே வெங்கக்கல்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வசதி கேட்டு மனு கொடுத்தனர். அதில், ஏற்கனவே கலெக்டரிடம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். ஆதி தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் முல்லையரசு தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், எய்ம்ஸ் மருத்துவமனை ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அமைக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
நலத்திட்ட உதவிகள்
கூட்டத்தில் மொத்தம் 322 மனுக்கள் பெறப்பட்டன. தாட்கோ மூலம் கலெக்டரின் விருப்புரிமை நிதியின் கீழ் பயனாளி ஒருவருக்கு காலணி கடை வைத்து தொழில் செய்வதற்காக ரூ.20 ஆயிரம் நிதியினையும், மாவட்ட சமூக நலத்துறையின் சார்பாக 15 பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரத்து 180 வீதம் ரூ.1 லட்சத்து 82 ஆயிரத்து 700 மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரங்களையும் கலெக்டர் கோவிந்தராஜ் வழங்கினார்.

Related Tags :
Next Story