டாஸ்மாக்கடையை மூடக்கோரி மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் 10 பேர் கைது

தஞ்சையில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்க நிறுவனர் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை கீழவாசல் பகுதியில் காமராஜர் சிலை அருகே அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடை அமைந்துள்ள பகுதியில் பள்ளிவாசல், வங்கி, வர்த்தக நிறுவனங்கள் அதிக அளவில் இயங்கி வருகின்றன. இதனால் இந்த பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். இந்த பகுதியில் டாஸ்மாக்கடை அமைந்துள்ளதால் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக்கடையை அகற்ற வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்களை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தினர் டாஸ்மாக்கடையை அகற்றக்கோரி கருப்புக்கொடியுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். இதையடுத்து அந்த டாஸ்மாக் கடை முன்பு நேற்று காலை முதல் போலீசார் அதிக அளவில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
கடை திறக்கும் நேரத்தை கடந்த பின்னரும் போராட்டக்காரர்கள் வரவில்லை. இதையடுத்து போலீசார் டாஸ்மாக்கடை அருகில் உள்ள வீடுகளின் மாடிகளில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தவர்கள் பதுங்கி இருக்கின்றனரா? என தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தின் நிறுவனர் ரவிச்சந்திரன் டாஸ்மாக்கடை அமைந்திருந்த கட்டிடத்தின் மாடியில் ஏறி தற்கொலை செய்யப்போவதாக கூறி மிரட்டல் விடுத்தார்.
அப்போது போலீசார் அந்த மாடிக்கு சென்று ரவிச்சந்திரனை கைது செய்தனர். இதே போல் போராட்டம் நடத்துவதற்காக கருப்புக்கொடியுடன் வந்த மாநில தலைவர் முத்துமோகன்ராஜ், மாநில பொதுச்செயலாளர் பொய்யாமணி, மாநில பொருளாளர் நீலகண்டன், மாவட்ட தலைவர் சிவா, மாவட்ட செயலாளர் பாஸ்கர், மாவட்ட இளைஞர் படை தலைவர் ஜீவா, நிர்வாகிகள் அப்பு, ரபீக், விஜய், ஆசிப் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story