காமராஜர் பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை

காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு, தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரி,
புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் காமராஜர் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ராஜாதியேட்டர் சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், தீப்பாய்ந்தான், முன்னாள் முதல்–அமைச்சர் எம்.டி.ஆர். ராமச்சந்திரன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
என்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் அசோக் ஆனந்த், என்.எஸ்.ஜெ.ஜெயபால், சுகுமாறன், முன்னாள் சபாநாயகர் சபாபதி, கட்சியின் பொதுச்செயலாளர் பாலன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக 100 அடி ரோட்டில் உள்ள என்ஆர். காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி கலந்து கொண்டு காமராஜரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியதை செலுத்தினார்.
பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் செல்வகணபதி, சங்கர், பொதுச்செயலாளர் தங்க. விக்ரமன், உழவர்கரை மாவட்ட தலைவர் சிவானந்தம் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.பா.ம.க. சார்பில் மாநில துணை அமைப்பாளர் செல்வராசு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தொழிற்சங்க தலைவர் ஜெயபாலன், துணை செயலாளர் வடிவேலு, மண்டல செயலாளர் சிவா, இளைஞரணி துணை செயலாளர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதே போல் புதியநீதிக்கட்சியின் மாநில தலைவர் பொன்னுரங்கம் தலைமையிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ பொழிலன் தலைமையிலும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.