மராட்டியத்தில் டாக்டரை செருப்பால் அடித்த நர்சு

மராட்டியத்தில் 2 மாதமாக சம்பளம் வழங்காததால் டாக்டரை நர்சு செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மும்பை,
ஆனால், அவர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், டாக்டர் மகேஷ் ரத்தோடு மீது நர்சு ஆத்திரத்தில் இருந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு ஆஸ்பத்திரி வளாகத்தில் டாக்டர் வழக்கமான ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அந்த நர்சு திடீரென அவரை செருப்பால் ‘பளார், பளார்’ என அறைந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத டாக்டர் மகேஷ் ரத்தோடு, அதிர்ச்சியில் உறைந்தார். ஆஸ்பத்திரியில் பிற நர்சுகள், டாக்டர்கள் மற்றும் நோயாளிகளின் கண் முன்பாகவே இந்த சம்பவம் அரங்கேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதைத்தொடர்ந்து, அந்த நர்சும், டாக்டர் மகேஷ் ரத்தோடும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் செய்தனர். நர்சு அளித்த புகார் மனுவில், மகேஷ் ரத்தோடு நிலுவையில் உள்ள தனது சம்பளத்தை வழங்கவில்லை என்றும், இதுபற்றி முறையிட்டபோது தன் கையை பிடித்து இழுத்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த புகார்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஸ்பத்திரி வளாகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். மேலும், டாக்டரிடமும், நர்சிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story