கிருஷ்ணகிரியில் மின்சார வாரிய பொறியாளர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு வாயிற் கூட்டம்

கிருஷ்ணகிரி அவதானப்பட்டியில் உள்ள மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரில் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு வாயிற் கூட்டம் நேற்று நடந்தது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அவதானப்பட்டியில் உள்ள மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரில் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு வாயிற் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் சம்பத், கற்பகவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் (வலைதளம்) நரசிம்மன் கலந்துகொண்டு பேசினார். இதில் செயலாளர்கள் சரவணன், ராஜா, போச்சம்பள்ளி சரவணன், கீதாராணி, வரலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் இளையராஜா நன்றி கூறினார்.
இந்த கூட்டத்தின் போது, அனைத்து வினியோக பிரிவுகளுக்கும் தொழில்நுட்ப உதவியாளர் பதவிகள் வழங்கிட வேண்டும். அரசு துறைக்கு இணையாக தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு ஊதியம் அளித்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.