ராயபுரம் மேம்பாலத்துக்கு கீழே புதிய இருப்புப்பாதை அமைக்கும் பணி 25-ந்தேதி முதல் போக்குவரத்து மாற்றம்


ராயபுரம் மேம்பாலத்துக்கு கீழே புதிய இருப்புப்பாதை அமைக்கும் பணி 25-ந்தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 22 July 2017 3:30 AM IST (Updated: 22 July 2017 12:43 AM IST)
t-max-icont-min-icon

சென்னை துறைமுகத்தில் இருந்து ராயபுரத்துக்கு கூடுதலாக புதிய இருப்புப்பாதைகள் அமைக்கப்பட உள்ளது.

சென்னை,

சென்னை துறைமுகத்தில் இருந்து ராயபுரத்துக்கு கூடுதலாக புதிய இருப்புப்பாதைகள் அமைக்கப்பட உள்ளது. அந்த இருப்புப்பாதைகளை ராயபுரம் மேம்பாலத்துக்கு கீழே அமைக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. இதற்கான பணி தொடங்க உள்ளது.

இதையொட்டி ராயபுரம் மேம்பாலத்தை சுற்றியுள்ள சாலைகளில் வருகிற 25-ந்தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. 2 மாத காலத்துக்கு தற்காலிகமாக இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என்று போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் தெரிவித்து உள்ளனர். 

Next Story