மாம்பழம் இனிப்பு.. சம்பவம் கசப்பு..
இந்தியா- பாகிஸ்தான் இடையே பல விஷயங்களில் முட்டல், மோதல் இருக்கிறது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே பல விஷயங்களில் முட்டல், மோதல் இருக்கிறது. ஆனால் இந்த விஷயம் வித்தியாசமானது! குறிப்பிட்ட ஒரு வகை மாம்பழம் தங்கள் நாட்டுக்கே சொந்தமானது என்று கொடி பிடித்துக்கொண்டு நிற்கிறார்கள், இரு நாட்டு மாம்பழப் பிரியர் களும்.
‘ரத்தால்’ என்று புகழ்பெற்ற மாம்பழ வகையின் பிறப்பிடம், அதன் பெயருக்கேற்ப, உத்தரப்பிரதேசத்தின் ‘ரத்தால்’ நகரம்தான் என்கிறார்கள், இந்தியர்கள். இல்லை, சற்று பெயர் மாற்றி (‘அன்வர் ரத்தால்’) அழைக்கப்பட்டாலும் அது தங்கள் நாட்டுக்கே சொந்தம் என்கிறார்கள், பாகிஸ்தானியர்கள்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலைமை சுமுகமாக இருக்கையில், இரு நாட்டுத் தலைவர்களும் மாம்பழக் கூடைகளைப் பரிமாறிக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது.
அப்படி, 1981-ம் ஆண்டு அப்போதைய பாகிஸ்தானிய அதிபர் ஜியா உல் ஹக், இந்திரா காந்திக்கு ஒரு கூடை ‘அன்வர் ரத்தால்’ மாம்பழங்களை அனுப்பிவைத்தார். அந்த இனிப்பான பரிசில் இந்திரா காந்தி மனம் மகிழ்ந்தாலும், செய்தி அறிந்து கொந்தளித்துவிட்டார்கள், இங்குள்ள ரத்தால்காரர்கள். உடனே ஒரு குழுவாக கிளம்பிச் சென்று இந்திரா காந்தியைப் பார்த்த அவர்கள், ‘பாகிஸ்தான் அதிபர் அனுப்பியிருப்பது ‘பொய்யான’ ரத்தால் மாம்பழம். அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது’ என்றார்கள்.
இந்திரா காந்தி அவர்களுக்கு என்ன சமாதானம் சொன்னார் என்று தெரியவில்லை. ஆனால் ‘ரத்தால்’ பிரச்சினை இன்னும் ரத்தாகவில்லை.
இதுதொடர்பாக ரத்தால்வாசியும், மாம்பழ நேசருமான சோகைல் ஹஸ்மி, “ரத்தால் மாம்பழம் இந்தியாவுக்குச் சொந்தமானதே தவிர, பாகிஸ்தானுக்கு உரிமையானது அல்ல. அதை எங்கள் பகுதி மாம்பழ விவசாயிகள் அன்றே பிரதமர் இந்திரா காந்தியிடம் அழுத்தம்திருத்தமாக எடுத்துச் சொன்னார்கள்” என்கிறார்.
அவரே தொடர்ந்து, “இந்த மாம்பழம் ‘ரத்தால்’ என்று குறிப்பிடப்படுவதில் இருந்தே இது எந்த நாட்டைச் சேர்ந்தது என்பது புரியும். இங்கிருந்து பாகிஸ்தானுக்குச் சென்ற சிலர், இந்த மாம்பழச் செடிகளை அங்குள்ள முல்தான் பகுதியில் வளர்த்து விளைவித்திருக்கிறார்கள். அப்படி ஆரம்பத்தில் அங்கு இம்மாம்பழத்தை விளைவித்தவர்களில் ஒருவர், அதற்கு தனது தந்தையின் பெயரைச் சேர்த்து சூட்டியிருக்கிறார். ஆனால் இப்போது அது பாகிஸ்தானுக்கே சொந்தமானது என்கிற மாதிரி கதை விடுகிறார்கள்” என்கிறார் சூடாக.
ரத்தால் மாம்பழத்தின் பெருமையைப் பரப்பும் வகையில் சோகைல் உள்ளிட்டோர் இம்மாம்பழக் கண்காட்சிகளை அவ்வப்போது நடத்தி வருகின்றனர்.
புராண காலம் முதல், இன்றைய நவீன காலம் வரை மாம்பழம் என்றால் பிரச்சினைதானோ!

Related Tags :
Next Story