கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி மலேசியா தப்பி செல்ல முயற்சி சென்னை விமான நிலையத்தில் கைது


கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி மலேசியா தப்பி செல்ல முயற்சி சென்னை விமான நிலையத்தில் கைது
x
தினத்தந்தி 2 Aug 2017 5:00 AM IST (Updated: 2 Aug 2017 2:08 AM IST)
t-max-icont-min-icon

கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ரவுடி மலேசியா தப்பி செல்ல முயற்சித்தபோது சென்னை விமான நிலையத்தில் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி ஜாம்பஜார் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 32). பிரபல ரவுடி. கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாம்பஜார் பகுதியில் மார்க்கெட் முரளி என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மார்க்கெட் விக்ரம் என்ற ரவுடி தலைமறைவாக இருந்தார். அவரை சமீபத்தில் துப்பாக்கியுடன் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு முக்கிய குற்றவாளியான ரவுடி விக்னேஷ் தலைமறைவாகி விட்டார். அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

விமான நிலையத்தில் கைது

இந்த நிலையில் நேற்று ரவுடி விக்னேஷ், மலேசியாவுக்கு தப்பி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்றார். விமானத்தில் ஏற முயற்சித்தபோது அவரை குடியுரிமை அதிகாரிகள் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதுபற்றி ஜாம்பஜார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜாம்பஜார் போலீசார் விரைந்து சென்று விக்னேசை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது. விசாரணைக்கு பிறகு அவர் நீதிமன்ற காவலில் சிறை யில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர். 

Next Story