குடிபோதையில் சாகசம் செய்த போது மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து 2 வாலிபர்கள் பலி

குடிபோதையில் சாகசம் செய்த போது மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து 2 வாலிபர்கள் பலியானார்கள்.
மும்பை,
குடிபோதையில் சாகசம் செய்த போது மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து 2 வாலிபர்கள் பலியானார்கள்.
சாகசம்சிந்துதுர்க் மாவட்டம் அம்போலி பகுதியை சேர்ந்தவர் பிரதாப் ராத்தோடு(வயது21). இவரது நண்பர் இர்பான் கர்தி(26). இருவரும் சம்பவத்தன்று காவ்லேசாத் என்ற மலை வாசஸ்தலத்திற்கு சுற்றுலா வந்தனர். மலை உச்சிக்கு சென்ற இருவரும் அங்கு மது அருந்தினர்.
பின்னர் அவர்கள் மலை உச்சியில் உள்ள தடுப்புசுவர் மீது ஏறி நின்று கொண்டு சாகசம் செய்தனர். அப்போது துரதிருஷ்டவசமாக பிரதாப் ராத்தோடு கால் தவறி கீழே பள்ளத்தாக்கில் விழுந்தார். அப்போது அவரை காப்பாற்ற முயன்ற இர்பான் கர்தியும் அவருடன் கீழே விழுந்தார்.
வாலிபர்கள் பலிஇந்த சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து, பள்ளத்தாக்கில் கயிறு மூலம் கீழே இறங்கினர். அப்போது வாலிபர்கள் இரண்டு பேரும் பள்ளத்தாக்கில் படுகாயங்களுடன் பிணமாக கிடந்தனர். தீயணைப்பு படையினர் அவர்களது உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் மலையில் இருந்து விழுந்த பயங்கர காட்சியை அங்கிருந்தவர்கள் சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பரப்பிவிட்டது குறிப்பிடத்தக்கது.