ராஜபாளையத்தில் குடிதண்ணீருடன் கழிவுநீர் கலந்து வந்தது

தற்போது நிலவி வரும் வறட்சியின் காரணமாக, ராஜ பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளுக்கும் முறை வைத்து 20 முதல் 30 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ராஜபாளையம்,
இந்த நிலையில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) தண்ணீர் வர வேண்டிய நிலையில் நேற்று முன்தினம் மாலை நகராட்சியின் 34-வது வார்டுக்கு உட்பட்ட மங்காபுரம் பகுதிக்கு திடீரென தண்ணீர் வந்தது. குழாயில் குடிநீரை பிடித்த மக்கள், அதில் கழிவுநீர் கலந்துள்ளதை அறிந்து தண்ணீர் திறந்து விடும் நகராட்சி ஊழியரிடம் விசாரித்துள்ளனர்.
அவர் முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. வேறு வழியில்லாமல் கழிவு கலந்து வந்த நீரையே அப்பகுதி மக்கள் தற்போது சேமித்து வைத்துள்ளனர். மாதம் ஒரு முறை வரும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதால் குடிக்க பயன்படுத்த முடியாத நிலையில், குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்
தற்போது தமிழகத்தில் ஆங்காங்கே மர்ம காய்ச்சல் பரவி வரும் நிலையில், ராஜபாளையத்திலும் உயிர் கொல்லி நோய்கள் பரவிவிடுமோ என்ற அச்சத்தில் இருப்பதாக அப் பகுதி பெண்கள் தெரிவித்தனர். தங்கள் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டி முறையாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளதால், கழிவுகள் கலப்பதாக பொது மக்கள் குற்றம்சாட்டினர். உடனடியாக தண்ணீர் தொட்டியை முறையாக சுத்தப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

Related Tags :
Next Story