மும்பையில் பன்றிக்காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலி மஞ்சள் காமாலையால் கர்ப்பிணி சாவு

மும்பையில் பன்றிக்காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலியானார்கள். மஞ்சள் காமாலையால் கர்ப்பிணி உயிரிழந்தார்.
மும்பை,
மும்பையில் பன்றிக்காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலியானார்கள். மஞ்சள் காமாலையால் கர்ப்பிணி உயிரிழந்தார்.
பெண்கள் பலிமும்பை சிவ்ரியை சேர்ந்த 33 வயது பெண் 5 நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டார். குடும்பத்தினர் அங்குள்ள மாநகராட்சி மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார். இதேபோல முல்லுண்டை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் நோய் காரணமாக மாநகராட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த மூதாட்டியும் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
மஞ்சள் காமாலைகுர்லாவை சேர்ந்த 25 வயது 7 மாத கர்ப்பிணி பெண் நோய் காரணமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனையில் அவருக்கு மஞ்சள் காமாலை இருப்பது தெரியவந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று முன்தினம் பலியானார். இந்த தகவல்களை மாநகராட்சி சுகாதாரத்துறை உறுதிப்படுத்தி உள்ளது. இந்த மழைக்காலத்தில் இதுவரை பன்றிக்காய்ச்சலுக்கு 24 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.