பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக டாக்டர்கள் மீது புகார்: கிராம மக்கள் சாலை மறியல்
பெண்ணுக்கு டாக்டர்கள் தவறான சிகிச்சை அளித்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி பெரம்பலூர் அரசு மருத்துவமனை முன்பு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளத்தை சேர்ந்தவர் செந்தில். தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி மணிமேகலை(வயது28). மணிமேகலைக்கு கருத்தடை கருவி பொருத்தப்பட்டிருந்தது. அதனை அகற்றுவதற்காக மணிமேகலை பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின்போது உடலில் துளையுடன் புண் ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்ய டாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து மணிமேகலைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து மணிமேகலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை டாக்டர்கள், செந்திலிடம் கூறி அவரிடம் கையெழுத்து பெற முயன்றுள்ளனர். ஆனால் அதற்கு செந்தில் உடன்படவில்லை.
சாலை மறியல்
இதற்கிடையே செந்தில், அவருடைய உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நேற்று இரவு அரசு மருத்்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். டாக்டர்களின் தவறான சிகிச்சையால் மணிமேகலை உயிருக்கு ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், தவறான சிகிக்சை அளித்த டாக்டர்கள் மீது மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியும் அவர்கள் சுமார் ½ மணி நேரம் மறியல் செய்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தாசில்தார் பாலகிருஷ்ணன், பெரம்பலூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்களுடைய கோரிக்கையை புகார் மனுவாக எழுதித்தருமாறும், அதன்பேரில் விசாரணை செய்து உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைப்பதாக அதிகாரிகள் கேட்டுக்்கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டனர்.

Related Tags :
Next Story