கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மழை விவசாயிகள் மகிழ்ச்சி


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் மழை விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 15 Aug 2017 4:30 AM IST (Updated: 15 Aug 2017 2:36 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதம் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்தது. இந்த நிலையில் இந்த மாத தொடக்கம் முதல் தொடர்ந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்தது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பெனுகொண்டாபுரம்-10.20, போச்சம்பள்ளி-9.20, பாரூர்-8.40, நெடுங்கல்-2. கிருஷ்ணகிரி-1.

விவசாயிகள் மகிழ்ச்சி

மாவட்டம் முழுவதும் மொத்தம் 30.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Related Tags :
Next Story