சுதந்திரதினவிழாவில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் நடராஜன் வழங்கினார்

ராமநாதபுரத்தில் நடைபெற்ற சுதந்திரதினவிழாவில் கலெக்டர் நடராஜன் தேசியகொடி ஏற்றி வைத்தார். விழாவில் 223 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. கலெக்டர் நடராஜன் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். முன்னதாக ஆயுதப்படை மைதானத்திற்கு வந்த கலெக்டர் நடராஜனை மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா ஆகியோர் வரவேற்றனர். விழாவில், சுதந்திரப் போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து கலெக்டர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 32 காவல்துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறைகளை சார்ந்த 80 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
மாவட்ட திட்ட இயக்குனர் தளபதி, வருவாய் கோட்டாட்சியர் பேபி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் போஸ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வகுமார், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சகாய ஸ்டீபன் ராஜ், துணை இயக்குனர்கள் குமரகுருபரன், மீனாட்சி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் குருதிவேல்மாறன், மாவட்ட வேளாண் அலுவலர் அம்பேத்குமார் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
மேலும், பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் மொத்தம் 223 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 14 லட்சத்து 85 ஆயிரத்து 647 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
ராமநாதபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் மாவட்ட நீதிபதி கயல்விழி தேசியகொடி ஏற்றி வைத்தார். இதில், தலைமை குற்றவியல் நீதிபதி அனில்குமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஸ்குமார், சப்-கோர்ட்டு நீதிபதி பிரீத்தா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சொர்ணகுமார், வக்கீல் சங்க தலைவர் அழகுபாலகிருஷ்ணன், செயலாளர் சலீம், துணை தலைவர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் வருமானத்துறை அலுவலகத்தில் மாவட்ட வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் கொடி ஏற்றினார். வருமான வரித்துறை அலுவலர் காளிதாஸ் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் சுதந்திர தினவிழாவையொட்டி அரண்மனையில் இருந்து ஊர்வலமாக வந்து அரசு ஆஸ்பத்திரி வாயில் பகுதியில் மாநில துணை தலைவர்கள் குப்புராமு, சுப.நாகராஜன் ஆகியோர் தேசியகொடி ஏற்றி வைத்தனர். இதில் மாவட்ட தலைவர் முரளிதரன், மாவட்ட துணை தலைவர் குமார் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூயில் கல்லூரி டீன் முகமது ஜகாபர் தேசியகொடி ஏற்றி வைத்தார். முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வர் அலாவுதீன் தேசியகொடி ஏற்றி வைத்தார். கீழக்கரை செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லூரியில் முதல்வர் ரஜபுதீன், சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் கீழக்கரை நகரசபை ஆணையாளர் வசந்தி தேசியகொடி ஏற்றி வைத்தார். கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் முதல்வர் சுமையாதாவூது முன்னிலையில் செயலாளர் ஹாலித்புகாரி தேசியகொடி ஏற்றினார்.
கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியில் தாளாளர் முகைதீன் இப்ராகிம் தேசியகொடி ஏற்றினார். செயலாளர் ஜமால் இப்ராகிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ் கலந்து கொண்டனர். கீழக்கரை கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளி, தீனியா மெட்ரிக் பள்ளி, அல் பைனா மெட்ரிக் பள்ளி, முகைதீனியா பள்ளி, மக்தூமியா பள்ளி, கண்ணாடி வாப்பா மெட்ரிக் பள்ளி, சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப்பள்ளி, பேர்ல் மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் முதல்வர் மாரிமுத்து முன்னிலையில் தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தேசியகொடி ஏற்றி வைத்தார். ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஹாஜாமுகைதீன், உதவி தலைமை ஆசிரியர் ஜாகிர்உசேன் ஆகியோர் முன்னிலையில் தாளாளர் டாக்டர் பாபு அப்துல்லா தேசியகொடி ஏற்றி வைத்தார். செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் நாகலட்சுமி முன்னிலையில் தாளாளர் ராஜாத்தி அப்துல்லா தேசியகொடி ஏற்றி வைத்தார்.
செய்யது அம்மாள் கலை அறிவியில் கல்லூரியில் முதல்வர் அமானுல்லா ஹமீது முன்னிலையில் பொருளாளர் செல்லத்துரை அப்துல்லா தேசியகொடி ஏற்றி வைத்தார். ராமநாதபுரம் வேலு மாணிக்கம் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் தாளாளர் வேலுமனோகரன் தேசிய கொடி ஏற்றிவைத்தார். அறக்கட்டளை உறுப்பினர்கள் ஜெகநாதன், கதிரேசன், பள்ளி முதல்வர் பரிமளா அந்தோனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் செயலாளர் ஜீவலதா முன்னிலையில் தாளாளர் கணேச கண்ணன் தேசியகொடி ஏற்றி வைத்தார். ராமநாதபுரம் வீட்டுவசதி வாரிய பள்ளியில் முதல்வர் உஷா முன்னிலையில் தாளாளர் சண்முகராஜன் தேசியகொடியை ஏற்றி வைத்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

Related Tags :
Next Story