புதுவை கவர்னர் மாளிகையில் தேனீர் விருந்து நிகழ்ச்சி எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு


புதுவை கவர்னர் மாளிகையில் தேனீர் விருந்து நிகழ்ச்சி எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு
x
தினத்தந்தி 16 Aug 2017 5:00 AM IST (Updated: 16 Aug 2017 4:54 AM IST)
t-max-icont-min-icon

புதுவை கவர்னர் மாளிகையில் கவர்னர் கிரண்பெடி தலைமையில் தேனீர் விருந்து நேற்று மாலை நடைபெற்றது. இதில் முதல்–அமைச்சர் நாராயணசாமியை தவிர எம்.எல்.ஏ.க்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் மாளிகையில் சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய தினங்களில் முக்கிய பிரமுகர்களுக்கு தேனீர் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று கவர்னர் மாளிகையில் தேனீர் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கவர்னர் கிரண்பெடி தலைமை தாங்கினார். முதல்–அமைச்சர் நாராயணசாமி, தலைமை செயலர் மனோஜ் பரிதா, கலெக்டர் சத்யேந்திரசிங் துர்சாவத், போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் மற்றும் அரசு செயலர்கள், அரசு அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேனீர் விருந்து நிகழ்ச்சியின்போது முதல்–அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்வது வழக்கம். ஆனால் நேற்று மாலை நடந்த தேனீர் விருந்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி மட்டும் பங்கேற்றார். காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஒட்டுமொத்தமாக பங்கேற்காமல் புறக்கணித்தனர். இதில் பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ. சாமிநாதன் மட்டும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

முதல்–அமைச்சர் நாராயணசாமி, கவர்னரை கிரண்பெடியை சந்தித்துவிட்டு அடுத்த சில நிமிடங்களில் கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.

Next Story