நாட்டு மாடுகளை காப்போம்

இன்று உலகின் பால் உற்பத்தி சுமார் 50 கோடி டன்னுக்கும் அதிகம் ஆகும். இதற்காக வளர்க்கப்படும் பசுக்களின் எண்ணிக்கை 22.2 கோடி.
இன்று உலகின் பால் உற்பத்தி சுமார் 50 கோடி டன்னுக்கும் அதிகம் ஆகும். இதற்காக வளர்க்கப்படும் பசுக்களின் எண்ணிக்கை 22.2 கோடி. பால் அதிகம் கிடைக்க வேண்டுமெனில் பசுக்கள் அதிகமான எண்ணிக்கையில் கன்றுகளை ஈன வேண்டும். இது நடைமுறைச் சாத்தியமில்லை என்பதால் செயற்கைக் கருவூட்டல் வந்தது. மிகையான பால் தேவைக்காக பசுவின் கருவிலேயே கை வைத்தார்கள்.
செயற்கை கருவூட்டல் முறையால், காளைகளின் அவசியம் குறைந்தது. அவை படிப்படியாக அழிந்தன. இதையடுத்து சிந்து, ரெட்டேன், ஜெர்ஸி, எச்.எப், ப்ரவுன் ஸ்விஸ் போன்ற கலப்பின மாடுகள் பெருகின. மேய்ச்சல் நிலங்கள் அழிக்கப்பட்டன. மாட்டுத் தீவனங்கள் வந்தன. இரண்டு லிட்டர் கறந்த மாட்டிலிருந்து இருபது லிட்டர் பால் கறக்கப்பட்டது. ஒரு மாட்டில் ஐந்து முதல் எட்டு நிமிடங்களில் இரண்டு லிட்டர் பால் கறப்பதுதான், மாட்டின் உயிரியல் முறையை குலைக்காமல் இருப்பதாகும். ஆனால் தற்போதைய கால சூழ்நிலையில் அதே கால அவகாசத்தில் எந்திரம் வைத்து இருபது லிட்டர் பால் கறக்கப்படுகிறது. மருத்துவ உலகம் இதை தீவிரமாக ஆராய்ந்ததில் பல உண்மைகள் தெரியவந்தன.
பாலில் கால்சியம், கேசின் என்ற புரதம், வைட்டமின் ஏ ஆகியவை உள்ளன. கேசின் புரதத்தில் ஏ1, ஏ2 என்று இரண்டு வகை உள்ளன. அயல்நாட்டு கலப்பின மாடுகளில் ஏ1 கேசினும், நம் நாட்டு மாடுகளில் ஏ2 கேசினும் இருக்கின்றன. ஏ1 பாலை உட்கொள்ளும்போது அது செரிமானத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் உடலில் பல்வேறு பாதிப்புகள் உருவாகின்றன. நாட்டு மாடுகளிலிருந்து கிடைக்கும் ஏ2 பால் செரிமானத்தில் மாற்றம் ஏற்படுத்தாமல் உடலுக்கு நன்மை செய்கிறது. மேற்கண்ட உண்மைகள் பல்வேறு அறிவியல் ஆய்வுகள் மூலம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஜல்லிக்கட்டு போராட்டங்களுக்கு பிறகு, ஏ2 நாட்டு மாட்டுப் பால் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. சென்னை, காஞ்சீபுரம், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, திருச்செங்கோடு ஆகிய ஊர்களில் நாட்டு மாடுகளின் மூலம் ஏ2 பால் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே நாட்டு மாடுகளை காப்பதில் நாம் அதிக அக்கறை கொள்ள வேண்டியது அவசியமும், அவசரமும் ஆகும்.

Related Tags :
Next Story