கவர்னர் உத்தரவிடவில்லையென்றால் மக்கள் கிளர்ச்சிக்கு வழிவகுத்து விடும் கி.வீரமணி பேட்டி


கவர்னர் உத்தரவிடவில்லையென்றால் மக்கள் கிளர்ச்சிக்கு வழிவகுத்து விடும் கி.வீரமணி பேட்டி
x
தினத்தந்தி 1 Sept 2017 3:45 AM IST (Updated: 1 Sept 2017 12:23 AM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டமன்றத்தை கூட்டி அ.தி.மு.க.அரசு தனது பலத்தை நிரூபிக்க கவர்னர் உத்தரவிடவில்லையென்றால் மக்கள் கிளர்ச்சிக்கு வழிவகுத்து விடும் என்று கி.வீரமணி கூறினார்.

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் நடைபெற்ற திராவிடர் கழக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமணத்தில் அக்கட்சியின் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தற்போது ஆளுகின்ற அ.தி.மு.க. அரசு பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில் அக்கட்சியை சேர்ந்த 19 சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்- அமைச்சருக்கு தாங்கள் கொடுத்த ஆதரவை ‘வாபஸ்’ பெற்றுக்கொள்கிறோம் என தனித்தனியாக கடிதம் கொடுத்துள்ள நிலையில் தமிழக பொறுப்பு கவர்னர் பந்து என் கையில் இல்லை. நான் ஒன்றும் செய்ய முடியாது, இது உட்கட்சி பிரச்சினை என்று சொல்கிறார்.
இது அவராக சொல்கிறாரா அல்லது டெல்லி தாக்கீது படி சொல்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.

ஏற்கனவே 10 அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேறியபோது சட்டமன்றத்தை கூட்டி பலத்தை நிரூபியுங்கள் என கூறிய இதே கவர்னர், தற்போது 19 சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியே வந்துள்ள நிலையில் இவ்வாறு பதில் கூறுவது, இது உட்கட்சி பிரச்சினை அல்ல ஜனநாயகத்தை காப்பாற்றுகின்ற பிரச்சினை.

எனவே அரசியல் சாசன சட்டப்படி கவர்னர் தனது கடமையை செய்தாக வேண்டும். இல்லையேல் மாபெரும் மக்கள் கிளர்ச்சிக்கு வழி வகுக்கும். டெல்லியின் பொம்மலாட்டத்திற்கு தமிழக மக் களே முடிவு கட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story