திருச்சியில் இன்று கண்டன பொதுக்கூட்டம் மு.க.ஸ்டாலின் உள்பட 8 கட்சி தலைவர்கள் பேசுகிறார்கள்

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வலியுறுத்தி திருச்சியில் இன்று கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின் உள்பட 8 கட்சி தலைவர்கள் பேசுகிறார்கள்.
திருச்சி,
பிளஸ்-2 அரசு பொது தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்று இருந்தும், நீட் தேர்வினால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் அரியலூர் மாவட்டம் செந்துறை மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தினால் ஏற்பட்ட கொந்தளிப்பை தொடர்ந்து சென்னையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் அனிதா உயிரிழப்புக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வலியுறுத்தியும் செப்டம்பர் 8-ந்தேதி திருச்சியில் கண்டன பொதுக் கூட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தின் அடிப்படையில் திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை திடலில் இன்று (வெள்ளிக் கிழமை) மாலை 5 மணி அளவில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார். திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு. எம்.எல்.ஏ. வரவேற்று பேசுகிறார்.
இதில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். மேலும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோரும் பேசுகிறார்கள். கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் தஞ்சாவூரில் இருந்து இன்று மதியம் திருச்சி வருகிறார்.
கண்டன பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது பற்றிய ஆலோசனை கூட்டம் நேற்று திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேரு தலைமையில் நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்கள் கோவிந்தராஜ், ஜவகர், கலைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ராஜா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுரேஷ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அபிபுர் ரகுமான், ராஜாமுகமது, மனித நேய மக்கள் கட்சி சார்பில் அப்துல்ரகீம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் அருள், தி.க. சார்பில் சேகர் உள்பட தோழமை கட்சி நிர்வாகிகள் கலந்து கொன்டனர்.
கண்டன பொதுக்கூட்டம் தொடர்பாக கே.என். நேரு எம்.எல்.ஏ. வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழக மாணவர்களை பாதுகாக்க தி.மு.க. சபதம் எடுத்து போராடி வருகிறது. இதன் ஒரு கட்டமாக இன்று நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கண்டன உரை ஆற்ற உள்ளார். தமிழக மாணவர்களின் உரிமையை மீட்டெடுக்க நடைபெற உள்ள இந்த பொதுக்கூட்டத்தில் அனைத்து தி.மு.க.வினரும், தோழமை கட்சியினரும், மாணவர்களும், பெற்றோர்களும் ஓரணியில் திரண்டு வந்து பங்கேற்று நீட் தேர்வுக்கு முடிவு கட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story