கல்யாணமாம்.. கல்யாணம்..

இளம்பெண்களின் மனதைத் தொடும் அளவுக்கு வித்தியாசமான முறையில் சேவையாற்றிக்கொண்டிருக்கிறார், வல்சலா கோபிநாத்.
இளம்பெண்களின் மனதைத் தொடும் அளவுக்கு வித்தியாசமான முறையில் சேவையாற்றிக்கொண்டிருக்கிறார், வல்சலா கோபிநாத். ஐந்து வருடங்களில் இவர் 47 இளம் பெண்களுக்கு திருமணம் செய்துவைத்து அவர்கள் வாழ்க்கையில் விளக்கேற்றி இருக்கிறார்.
2012-ம் ஆண்டு இவர் விமன்ஸ் இந்தியன் அசோசியேஷன் என்ற அமைப்பில் தலைவராக இருந்தபோது, முதன் முதலில் பத்து பெண்களுக்கு திருமணம் செய்துவைத்தார்.
“ஏழ்மையால் திருமணம் செய்துகொள்ள வாய்ப்பற்ற பெண்கள் ஏராளமாக நம்மை சுற்றிலும் இருக்கிறார்கள். அவர்களில் சிலருக்காவது நல்ல மணவாழ்க்கையை அமைத்துக்கொடுக்கவேண்டும் என்பது என் லட்சியம். நான் இதை வெளிப்படுத்தியபோது சிலர் என்னிடம், என்ன உனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா என்று கேட்டார்கள். ஆனால் எதிர்த்தவர்களை எல்லாம் உடன்வைத்துக்கொண்டே இதை செய்துகாட்டவேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். சிரமமாக இருந்தாலும் கஷ்டப்பட்டு அதை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறேன்” என்கிறார், வல்சலா.
இவர் ஐந்தாண்டுகளாக பல்வேறு சமூக சேவை அமைப்புகளில் தலைமைப் பொறுப்பு களை அலங்கரிக்கிறார். அந்த அமைப்புகளின் சார்பில் ஏழைப் பெண்களுக்கு திருமணம் நடத்திவைக்கிறார்.
இவர் ஏனோதானோவென்று ஜோடிகளை தேர்ந்தெடுத்துவிடுவதில்லை. ஒவ்வொரு ஜோடியை தேர்ந்தெடுக்கும்போதும் மிகுந்த கவனத்தை செலுத்துகிறார். பத்திரிகைகளில் விளம்பரம்கொடுத்து தேர்வு செய் கிறார். நிச்சயதார்த்தம் முடிந்தும் திருமணத்தை நடத்த முடியாத நிலையில் இருப்பவர்கள், ஆதரவற்றோர், விதவைகளின் மகள்கள் போன்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.
“திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து வருகிறவர்களை நான் பல விதங்களில் ஆராய்கிறேன். திருமணத்தில் கொடுக்கும் தங்கத்தை அபகரிக்கும் நோக்கத்தில் சில ஏமாற்றுக்காரர்கள் வருவார்கள். ஏற்கனவே திருமணம் செய்துகொண்டவர்கள்கூட ஏமாற்றும் நோக்கத்தில் எங்களை அணுகியிருக்கிறார்கள்.
ஏழையாக இருந்தாலும், வசதிபடைத்தவராக இருந்தாலும் பெண்கள் தங்கள் மணவிழா சிறப்பாக, ஜொலிப்பாக நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதற்குதக்கபடி நாங்கள் மணவிழாவை ஏற்பாடு செய்கிறோம். ஆடிட்டோரியத்தில் விழா நடக்கும். நல்ல உணவு, வீடியோ, போட்டோ போன்றவைகளையும் ஏற்பாடு செய்வோம். ஒவ்வொரு ஜோடி மணமக்களுக்கும் 75 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்கிறோம். தாலி உள்பட 2 சவரன் தங்கமும், திருமண உடைகளும் ஒவ்வொரு புதுமணத் தம்பதிகளுக்கும் கொடுக்கிறோம். அவர்கள் குடும்பம் நடத்துவதற்கு தேவையான பொருட்களும் வழங்குகிறோம். மணமக் களுக்கு மனோதத்துவ கவுன்சலிங்கும் வழங்குவதுண்டு” என்று கூறும் வல்சலா, பணவசதிபடைத்தவர்கள் அனைவரும் ஏழைகளுக்கு உதவும் மனநிலையில் இருப்பதாகவும் சொல்கிறார். அதற்கு ஆதாரமாக ஒரு சம்பவத்தை நினைவுகூர்கிறார்.
“ஒருமுறை பயணத்தில் தொழிலதிபர் ஒருவரை சந்தித்தேன். அவர் என்னை பற்றி விசாரித்ததோடு நான் செய்துகொண்டிருக்கும் சேவைகள் பற்றியும் கேட்டறிந்தார். நான் முழுவதையும் சொன்னேன். மறுமுறை கூட்டுத்திருமணம் நடக்கும்போது தனக்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார். நானும் தகவல் சொன்னேன். அப்போது நடந்த திருமணங்களின் மொத்த செலவையும் அவரே ஏற்றுக்கொண்டார். அந்த அனுபவம் எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. ஏழைகளுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது. ஆனால் எப்படி உதவுவது என்று தெரியாமல் இருக்கிறார்கள். நாம் முதல் அடி எடுத்துவைத்தால், அவர்கள் பின்தொடருவார்கள். அதன் மூலம் சமூகத்திற்கு நல்ல பலன் கிடைக்கும்.
ஒவ்வொரு முறை சமூகத் திருமணங்கள் செய்யும்போதும் நிறைய பேர் உதவிக்கரம் நீட்டுவார்கள். திருமணத்திற்கு நகைகள், உடைகள் வாங்கும்போது உதவி செய் கிறார்கள். பலரது ஒத்துழைப்பால்தான் என்னால் இதை செய்ய முடிகிறது.
முகூர்த்தம் நடக்கும்போது ஒவ்வொரு மணப்பெண்ணின் முகத்திலும் விவரிக்க முடியாத மகிழ்ச்சி தோன்றும். கடந்த ஆண்டு சமூகத் திருமண நிகழ்வு நடந்தபோது, அதற்கு முன்பு நாங்கள் திருமணம் செய்துவைத்த அனைத்து தம்பதிகளையும் அழைத்தோம். அவர்கள் அனைவரும் நிறைவான வாழ்க்கை வாழ்வதை அவர்கள் முகத்தைப் பார்த்தே தெரிந்துகொண்டோம். சிலர் குழந்தைகளோடு வந்திருந்தார்கள். அவர்களை நான் தாய் ஸ்தானத்தில் இருந்து பார்த்து மகிழ்ந்தேன்” என்கிறார்.
வல்சலா, கேரளாவில் மஞ்சேரி பகுதியை சேர்ந்தவர். இவருடன் பிறந்தவர்கள் ஒன்பது பேர். இவரது கணவர் கோபிநாத் வன இலாகா அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு இரண்டு மகன் களும், ஒரு மகளும் உள்ளனர். வல்சலா கோபிநாத் ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்துவைப்பது மட்டுமின்றி, வேறு பல சமூக சேவைகளும் செய்து வருகிறார்.

Related Tags :
Next Story