மும்பை விமான நிலையத்தில் வங்கதேச பயங்கரவாதிகள் 2 பேர் கைது

மும்பை விமான நிலையத்தில் வங்கதேச பயங்கரவாதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை,

போலி பாஸ்போர்ட்
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் துருக்கி நாட்டிற்கு செல்லும் விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த 2 பேர் தங்களின் பாஸ்போர்ட்டை அங்கிருந்த அதிகாரிகளிடம் சரிபார்க்க கொடுத்தனர். இதனை வாங்கிய அதிகாரிகள் அவர்களின் பாஸ்போர்ட் போலியானது என்பதை கண்டறிந்தனர். எனவே அவர்கள் இதுகுறித்து சகார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் வங்கதேச நாட்டை சேர்ந்த அபோன் பார்வே மற்றும் அவரது நண்பர் என்பது தெரியவந்தது.
வங்கதேச பயங்கரவாதிகள்
இதையடுத்து போலீசார் வங்கதேச தூதரக அதிகாரிகளிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பயங்கரவாதிகள் என்பதும், வங்கதேச போலீசார் அவர்களை தேடி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் விசாரணையில் அவர்கள் துர்பேகிஸ்தான் நாட்டிற்கு தப்பி செல்ல முயன்றதும், தென்கொரியா, பர்மா, தாய்லாந்து நாட்டிற்கு போலி பாஸ்போர்ட்டில் சென்று வந்திருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு வருகிற 22-ந்தேதி வரை அவர்களை போலீஸ்காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.
இது குறித்து சாகர் போலீஸ்நிலைய சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறுகையில், “கைது செய்யப்பட்டவர்கள் இந்தியாவில் நாசவேலையில் ஈடுபட வந்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.

Related Tags :
Next Story