அப்ரண்டிஸ் பயிற்சிப்பணி


அப்ரண்டிஸ் பயிற்சிப்பணி
x
தினத்தந்தி 2 Oct 2017 3:05 PM IST (Updated: 2 Oct 2017 3:05 PM IST)
t-max-icont-min-icon

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் துணை நிறுவனமான இதில் தற்போது பட்டதாரிகள் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை படித்தவர்கள் பயிற்சிப் பணிக்கு தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ங்களூரில் பெட்ரோலிய வேதிப்பொருட்கள் சுத்தகரிப்பு தொழிற்சாலை ஒன்று செயல்படுகிறது. ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் துணை நிறுவனமான இதில் தற்போது பட்டதாரிகள் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை படித்தவர்கள் பயிற்சிப் பணிக்கு தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 189 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கெமிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள், டிப்பளமோ தொழில்நுட்ப படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 7-10-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.mr-pl.co.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும். 

Next Story