சிறுவர்கள் ஒன்றிணைத்து விளையாடும் ரோபோ

துண்டு துண்டு பாகங்களாக உள்ள இதை, 6 வயது சிறுவர்களால் ஒன்றிணைத்து செயல்படும் சூப்பர் ரோபோவை உருவாக்கிவிட முடியும்.
சிறுவர்களுக்கு ‘லிகோ பிரிக்ஸ்’களில் வீடு, கார், ரோபோ என பல உருவங்களை செய்து விளையாட ரொம்பவே பிடிக்கும். அதுபோல உதிரி பாகங்களை ஒன்றிணைத்து எளிதாக ஒரு ரோபோ செய்து விளையாட முடிந்தால் எப்படியிருக்கும்? என்ற எண்ணத்தில் உருவானதுதான் ‘மாபோட்’ எனப்படும் ரோபோ. ‘பெல் ரோபோட்’ நிறுவனம் இந்த அசத்தல் ரோபோவை உருவாக்கி உள்ளது. துண்டு துண்டு பாகங்களாக உள்ள இதை, 6 வயது சிறுவர்களால் ஒன்றிணைத்து செயல்படும் சூப்பர் ரோபோவை உருவாக்கிவிட முடியும். அத்துடன் இதற்கான சிறப்பு அப்ளிகேசனை ஸ்மார்ட்போனில் நிறுவிக் கொண்டால், ரோபோவை இயக்கி விளையாடலாம். மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட ரோபோக்களை ஒன்றிணைத்து செயல்படுத்தவும் முடியும். மொத்தத்தில் சிறுவர்களின் மூளைத்திறனை வளர்ப்பதோடு, பயனுள்ள பொழுதுபோக்காகவும் அமைகிறது மாபோட் ரோபோ விளையாட்டு.
Related Tags :
Next Story