மின்சாரம் தாக்கி மாணவர் பலி விடுமுறை நாளில் பெயிண்ட் அடிக்க சென்ற போது பரிதாபம்

வேர்கிளம்பி அருகே விடுமுறை நாளில் பெயிண்ட் அடிக்க சென்ற மாணவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
குமாரபுரம்,
தக்கலை அருகே உள்ள சுருளோடு பகுதியை சேர்ந்தவர் செல்வதாஸ். இவரது மகன் சாஜன் (வயது 24), ஐ.டி.ஐ. படித்துள்ளார். தற்போது ஒரு கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் சாஜன் பெயிண்ட் அடிக்கும் பணிக்கு சென்று வந்தார்.
சம்பவத்தன்று விடுமுறையையொட்டி வேர்கிளம்பி அருகே முண்டவிளையில் உள்ள ஒரு வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க சென்றார்.
அங்கு 2–வது மாடியில் வெளிப்புறமாக நின்று, நீண்ட கம்பி பிரஷ்சை வைத்து பெயிண்ட் அடித்து கொண்டிருந்தார். அப்போது, அவர் வைத்திருந்த கம்பி பிரஷ், சாலையோரம் சென்ற மின்கம்பி மீது உரசி மின்சாரம் பாய்ந்தது. இதில் உடல் கருகிய நிலையில் சாஜன் தூக்கி வீசப்பட்டார்.
2–வது மாடியில் இருந்து கீழே விழுந்த அவரை அருகில் நின்றவர்கள் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் சாஜன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கொற்றிகோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story