தூத்துக்குடியில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சீருடை அணிவகுப்பு


தூத்துக்குடியில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சீருடை அணிவகுப்பு
x
தினத்தந்தி 9 Oct 2017 5:05 AM IST (Updated: 9 Oct 2017 5:05 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் சீருடை அணிவகுப்பு ஊர்வலம் நேற்று மாலை நடந்தது.

தூத்துக்குடி,

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 93–வது ஆண்டு விழாவையொட்டி தூத்துக்குடியில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் சீருடை அணிவகுப்பு ஊர்வலம் நேற்று மாலை நடந்தது. ஊர்வலத்துக்கு தூத்துக்குடி மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் வக்கீல் சந்தோசம் தலைமை தாங்கினார். ஊர்வலம் தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகில் இருந்து தொடங்கி, பாலவிநாயகர் கோவில் தெரு, பாளையங்கோட்டை ரோடு வழியாக சென்று சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே முடிவடைந்தது.

அங்கு ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில துணை பொதுச்செயலாளர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆய்வுக்குழு உறுப்பினர் அழகேசன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழக தென்பிராந்திய துணைத்தலைவர் ஆறுமுகம் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி சீதாராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story