சேதுக்கரையில் ரூ.63.31 லட்சம் மதிப்பில் மேம்பாட்டு பணிகள் அமைச்சர் மணிகண்டன் ஆய்வு

சேதுக்கரையில் சுற்றுலா துறை சார்பில் ரூ.63.31 லட்சம் மதிப்பில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை அமைச்சர் மணிகண்டன் ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம்,
திருப்புல்லாணி யூனியன் சேதுக்கரை பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து மட்டுமல்லாது பிற மாவட்டங்களிலும் இருந்தும் அனைத்து தரப்பு மக்களும் அதிக அளவில் வருகின்றனர். அவர்கள் பெரும்பாலனோர் சேதுக்கரை கடற்கரையில் முன்னோர்களுக்கு புண்ணிய தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்துகின்றனர்.
சிலர் பயணிகளாக வந்து கடலில் குளித்து மகிழ்கின்றனர்.
இதனால் பொதுமக்களின் வசதிக்கேற்ப இந்த பகுதியில் சுற்றுலா மேம்பாட்டு துறை மூலம் ரூ.63.31 லட்சம் மதிப்பில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக சுற்றுலா பயணிகள் தங்கி இளைப்பாற ரூ.27.59 லட்சம் மதிப்பில் சுற்றுலாப் பயணிகள் ஓய்வுக்கூடம், ரூ.25.97 லட்சம் மதிப்பில் படித்துறை, கடலில் நீராடும் பக்தர்கள் பாதுகாப்பான முறையில் உடை மாற்றிட ஏதுவாக ரூ.9.75 லட்சம் மதிப்பில் உடை மாற்றும் அறை என மொத்தம் ரூ.63.31 லட்சம் மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைவாகவும், தரமான முறையிலும் மேற்கொண்டு காலதாமதமின்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story