கோபி, தாளவாடி பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலி
கோபி, தாளவாடி பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு 2 பெண்கள் பலியானார்கள்.
கடத்தூர்,
கோபி அருகே உள்ள பாரியூர் நஞ்சகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன். தச்சு தொழிலாளி. அவருடைய மகள் பிரியா (வயது 23). இவர் எம்.பி.ஏ. பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த வாரம் பிரியாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே சரவணன் மகளை கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு சிகிச்சை பெற்றும் அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை.
இறந்தார்...
இதனால் கோபியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குறையவில்லை.
இதைத்தொடர்ந்து பிரியா கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, பிரியாவுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.
அதனால் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு பிரியா பரிதாபமாக இறந்தார். அவருடைய உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
தடுப்பு சிகிச்சைகள்
பாரியூர் நஞ்சகவுண்டன்பாளையத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன் இதேபோல் ஒரு சிறுமி டெங்கு காய்ச்சலுக்கு பலியானார். அந்த பகுதியில் மேலும் பலர் காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
எனவே மருத்துவத்துறை அதிகாரிகள் பாரியூர் நஞ்சகவுண்டன்பாளையத்தில் முகாம் அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பு சிகிச்சைகள் அளிக்கவேண்டும் என்று அந்த பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
தொழிலாளி
இதேபொல் டெங்கு காய்ச்சலுக்கு தாளவாடியில் ஒரு பெண் பலியானார். அதன் விவரம் வருமாறு:-
தாளவாடி அருகே உள்ள நெய்தாளபுரத்தை சேர்ந்தவர் மாதேகவுடா. அவருடைய மனைவி சண்ணம்மா (50). கூலி தொழிலாளர்கள். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவரும் திருமணம் ஆகி அவரவர் குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகிறார்கள். மாதேகவுடாவும், சண்ணம்மாவும் கூலிவேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் சண்ணம்மாவுக்கு கடந்த ஒரு மாதமாக காய்ச்சல் விட்டு விட்டு வந்தது. இதனால் தாளவாடி அரசு ஆஸ்பத்திரியில் தங்கி 2 நாட்கள் சிகிச்சை பெற்றார். காய்ச்சல் குணமாகாததால் சத்தியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 4 நாட்கள் சிகிச்சை பெற்றார். அப்போதும் காய்ச்சல் குணமாகவில்லை. அதனால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
பராமரிக்க ஆள் இல்லை
ஈரோட்டில் டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, சண்ணம்மாவுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிந்தது. அதனால் அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல டாக்டர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் மாதேகவுடாவும், சண்ணம்மாவும் கண்ணட மொழி மட்டுமே பேசுவார்கள். தமிழ தெரியாது என்பதாலும், அவர்களை பராமரிக்க குடும்பத்தார் யாரும் முன் வராததாலும் மாதேகவுடா மனைவியை தன் வீட்டுக்கே அழைத்து சென்றுவிட்டதாக தெரிகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் சண்ணம்மாவுக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் மனைவியை மாதேகவுடா தாளவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார். ஆனால் ஆஸ்பத்திரியை நெருங்கும்போது சண்ணம்மா பரிதாபமாக இறந்துவிட்டார்.
நெய்தாளபுரம் பகுதியில் சாக்கடைகள் முறையாக தூர்வாரப்படாமல் ஏராளமான கொசுக்கள் உற்பத்தியாகி ஊரில் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்காரணமாகவே டெங்கு காய்ச்சல் பரவுகிறது என்று அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளார்கள்.

Related Tags :
Next Story