லட்சுமிபுரம் அணைக்கட்டு உபரிநீர் திறப்பு கிராம மக்கள் கால்வாயில் இறங்க வேண்டாம் கலெக்டர் எச்சரிக்கை

லட்சுமிபுரம் அணைக்கட்டு உபரி நீர் திறப்பு காரணமாக கிராம மக்கள் கால்வாயில் இறங்க வேண்டாம் என்று கலெக்டர் சுந்தரவல்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ள லட்சுமிபுரம் அணைக்கட்டு அதன் முழு கொள்ளளவான 10 அடியை எட்டியுள்ளதால், வலது மற்றும் இடது மதகுகள் மூலமாக வினாடிக்கு 80 கன அடி உபரிநீர் திறந்து விடப்படுகிறது.
இதனால் குமாரசிறுளபாக்கம், காட்டூர், தத்தமஞ்சி, பெரும்பேடு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வரத்து கால்வாயின் அருகில் செல்லவோ கால்வாய்க்குள் இறங்கவோ வேண்டாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story