முன்னாள் துணை போலீஸ் சூப்பிரண்டு அனுபமா செனாய் புதிய கட்சி தொடங்கினார்

‘பாரதீய ஜனசக்தி காங்கிரஸ்‘ என்ற பெயரில் முன்னாள் துணை போலீஸ் சூப்பிரண்டு அனுபமா செனாய் புதிய கட்சியை நேற்று தொடங்கினார்.
பெங்களூரு,
பல்லாரி மாவட்டம் கூட்லகியில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியவர் அனுபமா செனாய். இவர் சட்டவிரோத மது விற்பனையை கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொண்டார். இதனால் அவருக்கும் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யும் கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இதற்கிடையே, முன்னாள் மந்திரி பரமேஸ்வர் நாயக், அனுபமா செனாயின் பணிக்கு தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த அனுபமா செனாய் கடந்த ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பணி ராஜினாமா செய்த அனுபமா செனாய், அரசியல் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனால், அவர், அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு உருவானது. இதுகுறித்து, அனுபமா செனாயிடம் கேட்டபோது, ‘‘புதிய கட்சி விரைவில் தொடங்குகிறேன்‘ என்று அவர் கூறினார். இந்த நிலையில், புதிய கட்சி தொடங்கும் விழா நேற்று பல்லாரி மாவட்டம் கூட்லகியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.இந்த விழாவின்போது, ‘பாரதீய ஜனசக்தி காங்கிரஸ்‘ என்று தனது கட்சியின் பெயரை அவர் அறிவித்தார். பின்னர், அனுபமா செனாய் கூறுகையில், ‘ஜனநாயகம், பெண்கள் உரிமை ஆகியவற்றை காக்கும் நோக்கத்திலும், ஊழலை எதிர்த்து போராடவும் கட்சியை தொடங்கி இருக்கிறேன்‘ என்றார்.
‘கர்நாடக பிரஜ்ஞாவந்த ஜனதா‘ என்ற பெயரில் நேற்று முன்தினம் நடிகர் உபேந்திரா புதிய கட்சியை தொடங்கிய நிலையில், தற்போது அனுபமா செனாய் புதிய கட்சி தொடங்கி இருப்பது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story