தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து பிறந்தநாள்விழா: உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து பிறந்தநாளையொட்டி, அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து பிறந்தநாளையொட்டி, அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பிறந்தநாள் விழாதூத்துக்குடி நகருக்கு தாமிரபரணி தண்ணீர் கொண்டு வந்த முன்னாள் நகரசபை தலைவர் குரூஸ்பர்னாந்து பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் குரூஸ் பர்னாந்துக்கு மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் குரூஸ்பர்னாந்து பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கி குரூஸ்பர்னாந்து உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், மாநில இளைஞர், இளம்பெண்கள் பாசறை இணை செயலாளர் என்.சின்னத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் முருகன், ராமகிருஷ்ணன், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் யு.எஸ்.சேகர், பனைவெல்லம் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், முன்னாள் நகரசபை தலைவர் மனோஜ்குமார், நகர மாணவர் அணி செயலாளர் சாலமோன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சண்முகநாதன் எம்.எல்.ஏதூத்துக்குடி முன்னாள் நகரசபை தலைவர் குரூஸ் பர்னாந்து பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநில அமைப்புசாரா ஓட்டுநர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்கள் ஜோதிமணி, சத்யா லட்சுமணன், மாநகர வடக்கு பகுதி செயலாளர் பொன்ராஜ், இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மகளிர் அணி செரினா பாக்கியராஜ், வக்கீல் பிரிவு வீரபாகு, கோமதி மணிகண்டன், செல்வக்குமார் முன்னாள் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க.தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் குரூஸ் பர்னாந்து பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி தூத்துக்குடியில் உள்ள அவருடைய உருவச்சிலைக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன்செல்வின், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், ஜெயக்குமார் ரூபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ்தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் குரூஸ்பர்னாந்து உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் பாரகன்அந்தோணிமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுடலையாண்டி, டேனியல்ராஜ், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டேவிட்பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்மாநில காங்கிரஸ்தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் தலைமையில் கட்சியினர் குரூஸ்பர்னாந்து உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநகர தலைவர் காங்கிரஸ் எடிசன், மாவட்ட துணைத்தலைவர்கள் அம்பிகாபதி, ரவிக்குமார், இளைஞர் அணி தலைவர் அருண்நேருராஜ், தொண்டர் அணி தலைவர் பாக்கியதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாம் தமிழர் கட்சிதூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் குரூஸ் பர்னாந்து உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மண்டல செயலாளர் இசக்கிதுரை தலைமை தாங்கினார். மண்டல பொருளாளர் ரசுகின், மத்திய மாவட்ட தலைவர் அழகு என்ற ஆல்பர்ட் சாமுவேல், தூத்துக்குடி தொகுதி செயலாளர் பாக்கியராஜ், தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பில் குரூஸ்பர்னாந்து உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் கலையரசன், கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு ஆகியோர் தலைமை தாங்கினர். மண்டல தலைவர் வெற்றிசீலன், மத்திய மாவட்ட செயலாளர் ரமேஷ் பாபு, தூத்துக்குடி மாநகர செயலாளர் பாஸ்கர், தெற்கு மாவட்ட செயலாளர் சுப்பையா பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பரதர் நலச்சங்கம்தூத்துக்குடி மாவட்ட பரதர் நலச்சங்கம், பரதர் குல இளைஞர் கூட்டமைப்பு, அகில இந்திய பரதகுல இளைஞர் பேரவை சார்பில் குரூஸ்பர்னாந்து உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பரதர் நலச்சங்க தலைவர் ஜான்சன், பொதுச் செயலாளர் கனராஜ், அவைத்தலைவர் ஞாயம் ரொமால்ட், பொருளாளர் லியோ ஜான்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குரூஸ்பர்னாந்து பேரவைதூத்துக்குடி மாவட்ட குரூஸ்பர்னாந்து பேரவை சார்பில் பழைய மாநகராட்சி முன்பு 1000 பேருக்கு அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைவர் ஹெர்மன் கில்டு தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். செயலாளர் சசிக்குமார், பொருளாளர் சுதாகர், அமைப்பு செயலாளர் எட்வின்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் குரூஸ்பர்னாந்து பேரவையினர் திரளாக கலந்து கொண்டனர்.