ரெயில் மூலம் 850 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன

நெல்லையில் இருந்து ரெயில் மூலம் 850 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன.
நெல்லை,
மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என கடந்த ஆண்டு அறிவித்தது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தினர். சேகரிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் மூலம் 2 முறை பழைய ரூபாய் நோட்டுகள் சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அடுத்தகட்டமாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் இருந்து பழைய ரூபாய் நோட்டுகள் அட்டை பெட்டிகளில் அடைக்கப்பட்டு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன.
அதேபோல் நெல்லையில் உள்ள 2 வங்கி கிளைகளில் இருந்தும் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு அட்டை பெட்டிகளில் பழைய ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்பட்டன. அந்த ரூபாய் நோட்டுகள் தனி ரெயில் பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. மொத்தம் 211 அட்டை பெட்டிகளில் 850 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் இருந்தன.
திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 8.40 மணி அளவில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் வந்தது. அந்த ரெயிலில் பழைய ரூபாய் நோட்டுகள் வைக்கப்பட்டு இருந்த தனிப்பெட்டி இணைக்கப்பட்டது. பின்னர் 9 மணிக்கு ரெயில் புறப்பட்டு சென்றது. நெல்லை ஆயுதப்படை போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்புக்காக உடன் சென்றனர்.

Related Tags :
Next Story