பவானி நகராட்சி பகுதிகளில் கலெக்டர் திடீர் சோதனை துப்புரவு பணிகளை பார்வையிட்டார்

பவானி நகராட்சி பகுதிகளில் கலெக்டர் எஸ்.பிரபாகர் திடீர் சோதனை நடத்தினார். அப்போது பல்வேறு இடங்களிலும் துப்புரவு பணிகளை அவர் பார்வையிட்டார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் தூய்மை பணிகளை முறையாக செய்ய மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் நடவடிக்கை எடுத்து வருகிறார். அவர் அனைத்து பகுதிகளுக்கும் சென்று நேரடியாக துப்புரவு பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று காலை பவானி நகராட்சி பகுதிகளில் கலெக்டர் எஸ்.பிரபாகர் திடீர் சோதனை நடத்தினார். பவானி புதிய பஸ்நிலையத்துக்கு சென்ற அவர், அங்குள்ள பொதுகழிப்பிடத்துக்கு சென்று சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா? என்று பார்வையிட்டார். பஸ்நிலையத்தில் உள்ள குடிதண்ணீர் வசதி மற்றும் தூய்மையான தண்ணீர் வழங்கப்படுகிறதா? என்பதையும் சோதனை செய்தார். அங்கு லாரியில் குப்பை சேகரித்துக்கொண்டு இருந்த துப்புரவு பணியாளர்களிடம் கலெக்டர் உரையாடி, அவர்களின் பணி மற்றும் வசதிகள் குறித்து கேட்டு அறிந்தார்.
இதுபோல் பஸ் நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கான அறையை பார்வையிட்ட அவர் அங்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் பவானி நகராட்சியில் பல்வேறு வீடுகளுக்கும் சென்று குடிநீர் தொட்டிகளை பார்வையிட்டார். மேலும் குடிதண்ணீர் பிடித்து வைக்க பொதுமக்கள் பயன்படுத்தும் பாத்திரங்களையும் பார்வையிட்ட அவர், பாத்திரங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். தண்ணீர் வைக்கும் பாத்திரங்களை காற்று புகாத வகையில் மூடி வைக்கவும் கேட்டுக்கொண்டார். வீட்டின் சுற்றுப்புறங்களில் டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், சிரட்டை, உரல், ஆட்டுக்கல் ஆகியவற்றில் மழைநீர் தேங்காமல் அகற்ற வேண்டும். வீடுகளுக்கு சுகாதார பணியாளர்கள் வரும்போது வீட்டின் உள்பகுதியில் புகை மருந்து அடிக்க அனுமதித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதுமட்டுமின்றி பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரில் கலக்கப்படும் குளோரின் அளவையும் அவர் பரிசோதனை செய்தார்.
முன்னதாக பவானி புதிய பஸ்நிலையம் அருகே உள்ள அம்மா உணவகத்துக்கு சென்ற கலெக்டர் எஸ்.பிரபாகர் உணவின் தரம், உணவு தயாரிக்கும் பகுதி, பொதுமக்கள் சாப்பிடும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டு, உணவகத்தை நடத்தும் பணியாளர்களிடம் அதுபற்றி கேட்டு அறிந்தார்.

Related Tags :
Next Story