விவசாயிகள் அதிகளவில் மூலிகை பயிர்களை பயிரிட வேண்டும் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேச்சு
விவசாயிகள் அதிகளவில் மூலிகை பயிர்களை பயிரிட வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
நெல்லை,
விவசாயிகள் அதிகளவில் மூலிகை பயிர்களை பயிரிட வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
பயிற்சி வகுப்புபாளையங்கோட்டையில் உள்ள நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் மூலிகை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. கூடுதல் தலைமை செயலாளரும், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையாளருமான மோகன் பியாரி, பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பேசியதாவது:–
நல்ல வருமானம்இந்த பயிற்சி கூட்டம் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்திய சித்த மருத்துவம் குறித்த சிறப்புகள் அநேக மக்களுக்கு இன்னும் தெரியாமல் உள்ளது. நெல்லை மாவட்டத்தில் விவசாயிகள் அதிகளவில் நெல் சாகுபடி செய்கிறார்கள்.
மூலிகை பயிர்கள் சாகுபடியில் நல்ல வருமானம் உள்ளதால், இதுகுறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மூலிகை பயிர்கள் உற்பத்தியை சந்தைப்படுத்தும் வழிகள், ஏற்றுமதி குறித்த விவரங்களை விவசாயிகளுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.
அதிகளவில்...உலகளவில் இந்திய சித்த மருத்துவத்துக்கு சிறப்பான இடம் உள்ளது. இதை கருத்தில் கொண்டு விவசாயிகள் அதிகளவில் மூலிகை பயிர்களை உற்பத்தி செய்து பயனடைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில மருத்துவ மூலிகை வாரிய ஒருங்கிணைப்பாளர் இந்துமதி, தூத்துக்குடி துறைமுக போக்குவரத்து மேலாளர் ராஜேந்திரன், தூத்துக்குடி துறைமுக சுங்க தரகர் சங்கத்தலைவர் ஜெயந்த் தாமஸ், அரசு சித்த மருத்துவ கல்லூரி முதல்வர் நீலாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.