புகார் மனு வாங்க போலீசார் மறுப்பு கலெக்டர் அலுவலகம் முன் வியாபாரி தீக்குளிக்க முயற்சி

கோவையில் பணம் திருட்டு போனது தொடர்பான புகாரை போலீசார் வாங்க மறுத்ததால் கோவை கலெக்டர் அலுவலகம் முன் வியாபாரி தீக்குளிக்க முயன்றார்.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு போலீசார் எப்போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பார்கள். நேற்று விடுமுறை தினம் என்பதால் கலெக்டர் அலுவலகத்தில் ஊழியர்கள் யாரும் இல்லை. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடவில்லை. ஒரு சில பொதுமக்கள் மட்டுமே கலெக்டர் அலுவலகம் முன் நின்று கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 2 மணி அளவில் வாலிபர் ஒருவர் அங்கு வந்தார். அவர் திடீரென்று தன் உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் விரைந்து வந்து அவரிடம் இருந்த பெட்ரோல் பாட்டிலை பறித்தனர்.
இது குறித்த தகவலின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
போலீஸ் விசாரணையில் அவரது பெயர் செல்வக்குமார் என்ற செல்வம் (வயது 35), கோவை கோவில்பாளையத்தை சேர்ந்த மீன் வியாபாரி என்பது தெரியவந்தது. அவர் போலீசாரிடம் கூறியதாவது:-
நான் இன்று (நேற்று) காலை மீன் வாங்குவதற்காக காந்திபுரத்துக்கு வந்தேன். அங்குள்ள ஒரு டாஸ்மாக் பாரில் மது குடிக்க சென்றபோது, சிலர் என்னை மிரட்டி, என்னிடம் இருந்த ரூ.1,800 பணத்தை பறித்து கொண்டனர்.
இது தொடர்பாக புகார் அளிக்க காட்டூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றேன். ஆனால் எனது புகாரை வாங்க மறுத்து போலீசார் திருப்பி அனுப்பி விட்டனர். இதனால் மாநகர கமிஷனர் அலுவலகத் தில் புகார் அளிக்க முயன்றேன். அங்கேயும் என்னை போலீசார் அனுமதிக்க வில்லை. இதனால் மனமுடைந்த நான் ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வந்து, கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் நாளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
தற்போது விடுமுறை நாளில் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story