பழுதடைந்த நிலையில் உள்ள உயர் கோபுர மின்விளக்கை சீரமைக்க வேண்டும்


பழுதடைந்த நிலையில் உள்ள உயர் கோபுர மின்விளக்கை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 12 Dec 2017 5:00 AM IST (Updated: 12 Dec 2017 11:43 PM IST)
t-max-icont-min-icon

பேரம்பாக்கத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள உயர் கோபுர மின்விளக்கை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் பெருமாள் கோவில் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பெருமாள் கோவில் எதிரே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.3 லட்சம் செலவில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது.

அந்த உயர் கோபுர மின்விளக்கு பயன்பாட்டில் இருந்து வந்தது. கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வார்தா புயலின் போது இந்த உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்தது. மேலும் அந்த உயர்கோபுர மின்விளக்குக்கு செல்லும் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டு ஆன பின்னரும் அந்த உயர்கோபுர மின்விளக்கு சீரமைக்கப்படவில்லை.

அந்த உயர்கோபுர மின்விளக்குக்கு செல்லும் மின்இணைப்பு பெட்டி சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அதன் அருகில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளதால் அங்கு பள்ளி மாணவர்கள் அருகில் சென்றால் அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பழுதடைந்துள்ள உயர்கோபுர மின்விளக்கை அதிகாரிகள் காலதாமதம் செய்யாமல் சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story