பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்ட ம.ம.மு.க.வினர் 66 பேர் கைது
பாளையங்கோட்டையில் பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்ட ம.ம.மு.க.வினர் 66 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை,
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்கும் வரை அவர்களை தேட வேண்டும். இறந்த மீனவர்களின் குடும்பத்துக்கு அரசு அறிவித்த நிவாரணத்தையும், அரசு வேலையையும் உடனே வழங்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தினர், பாளையங்கோட்டை புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில தலைவர் பாளை.ரபீக் தலைமை தாங்கி போராட்டத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக அவர்கள் பாஸ்போர்ட் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
66 பேர் கைது
போராட்டத்தில் ஈடுபட்ட 66 பேரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றி சென்று அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த போராட்டத்தையொட்டி நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் விஜயகுமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Related Tags :
Next Story