கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட பிரேமகுமாரி முடிவு


கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட பிரேமகுமாரி முடிவு
x
தினத்தந்தி 16 Dec 2017 5:11 AM IST (Updated: 16 Dec 2017 5:11 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் மந்திரியுடன் காதல் விவகாரத்தில் சிக்கிய பிரேமகுமாரி தான் கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தார்.

மைசூரு,

பா.ஜனதாவைச் சேர்ந்த முன்னாள் மந்திரி எஸ்.ஏ.ராமதாசுடன் இணைத்து பேசப்பட்டு காதல் விவகாரத்தில் சிக்கியவர் பிரேமகுமாரி. இவர் நேற்று மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

முன்னாள் மந்திரி எஸ்.ஏ.ராமதாசும், நானும் காதலித்தது உண்மை தான். நாங்கள் ஒன்றாக இருந்ததும் உண்மைதான். அவர் தான் என் கணவர். நாங்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டோம். என்னுடைய அரசியல் குருவும் அவர் தான். என்னுடைய அரசியல் எதிர்காலம் ராமதாசின் கையில் தான் உள்ளது. அவர் நிர்ணயிக்கும் அரசியல் வாழ்க்கையை நான் ஏற்றுக்கொள்வேன்.

ஒருவேளை அவர் என்னை அரசியலில் இருந்து ஒதுக்க முயன்றால் அவரை எதிர்த்தே தேர்தலில் போட்டியிடுவேன். அடுத்த ஆண்டு(2018) கர்நாடகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் நான் போட்டியிடுவேன். ஆனால் எந்த தொகுதியில், எந்த கட்சி சார்பில் போட்டியிட வேண்டும் என்று இன்னும் முடிவு செய்யவில்லை.

நான் காங்கிரஸ் கட்சியில் சேர இருப்பதாகவும், அந்த கட்சி சார்பிலேயே அடுத்த தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் பலர் கூறுகிறார்கள். அது பொய்யான தகவல். நான் காங்கிரஸ் கட்சியில் சேருவதாக இல்லை. விரைவில் நான் எந்த கட்சி சார்பில், எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பதை அறிவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார். பிரேமகுமாரி அளித்த பேட்டியால் நேற்று மைசூருவில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story