அச்சன்கோவில் தர்ம சாஸ்தா கோவிலில் மண்டல பூஜை விழா கொடியேற்றம் தமிழக–கேரள பக்தர்கள் தரிசனம்


அச்சன்கோவில் தர்ம சாஸ்தா கோவிலில் மண்டல பூஜை விழா கொடியேற்றம் தமிழக–கேரள பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 17 Dec 2017 2:30 AM IST (Updated: 16 Dec 2017 6:24 PM IST)
t-max-icont-min-icon

அச்சன்கோவில் தர்ம சாஸ்தா கோவிலில் மண்டல பூஜை விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென்காசி,

அச்சன்கோவில் தர்ம சாஸ்தா கோவிலில் மண்டல பூஜை விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் தமிழக–கேரள பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கொடியேற்று விழா

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 35 கி.மீ. தொலைவில் கேரள மாநிலம் அச்சன்கோவில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை விழா பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று தொடங்கியது.

இந்த விழாவிற்காக அய்யப்பனுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்கள் நேற்று முன்தினம் மாலை அணிவிக்கப்பட்டது. நேற்று காலை 9 மணிக்கு தங்க கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. சபரிமலை முன்னாள் தந்திரி கண்டரரு மோகனரு தலைமையில் அர்ச்சகர்கள் கொடியை ஏற்றினார்கள். சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. நாராயண பாராயணம் நடைபெற்றது.

விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி பினு, கோவில் ஆலோசனைக்குழு தலைவர் சத்யசீலன், செயலாளர் உன்னி கிருஷ்ணன், துணைத் தலைவர் கோபி, ஆபரண பெட்டி வரவேற்புக்குழ தலைவர் ஏ.சி.எஸ்.ஜி.அரிகரன் மற்றும் தமிழக, கேரள பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

24–ந் தேதி தேரோட்டம்

திருவிழா வருகிற 25–ந் தேதி வரை நடைபெறுகிறது. 24–ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. 18–ந் தேதி முதல் 24–ந் தேதி வரை கருப்பன் துள்ளல் நடக்கிறது. விழா நடைபெறும் 10 நாட்களும் அன்னதானம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.


Next Story