மிளகாய் பயிருக்கு இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மிளகாய் பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2016–17–ம் ஆண்டு காப்பீடு திட்டத்தில் பதிவு செய்து வறட்சியால் பாதிக்கப்பட்டமிளகாய் விவசாயிகள் 6,044 பேருக்கு 100 சதவீதம் இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முத்துராமு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மயில்வாகனன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
இதில், மாநில துணை தலைவர் ரவீந்திரன், மாவட்ட பொருளாளர் முருகேசன், மாவட்ட துணை தலைவர்கள் சேதுராமு, முருகேசன், மாவட்ட துணை செயலாளர் நவநீதகிருஷ்ணன், கல்யாண சுந்தரம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், மிளகாய் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story