ஈரோட்டில் கைத்தறி சேலைகள் கண்காட்சி


ஈரோட்டில் கைத்தறி சேலைகள் கண்காட்சி
x
தினத்தந்தி 5 Jan 2018 3:27 AM IST (Updated: 5 Jan 2018 3:27 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு பெருந்துறைரோட்டில் கைத்தறி சேலைகள் கண்காட்சி நடக்கிறது.

ஈரோடு, 

மெட்ராஸ் மகாராணி ஹேண்ட்லூம் சேலைகள் நிறுவனம் சார்பில் ஈரோடு பெருந்துறைரோட்டில் உள்ள கிளப் மேலாஞ் ஓட்டலில் உள்ள குறிஞ்சி மகாலில் கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சியில் ரெடிமேட் டிசைனர் பிளவுஸ், கைத்தறி சேலைகள், மட்கா சில்க்ஸ், காட்டன் இக்கட், உப்படா சில்க்ஸ், சந்தோரி இண்டிகோஸ், கலம்காரி போன்ற 1,000-க்கும் மேற்பட்ட வகையான சேலைகள் விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி கண்காட்சி நடத்தப்பட்டு வருவதால் பெண்களை கவரும் வகையில் பாரம்பரிய ஆடைகள் உள்ளன. இந்த கண்காட்சி நாளை (சனிக்கிழமை) வரை நடக்கிறது. 

Next Story