கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் இன்னாசி முத்து தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
சத்துணவு பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம், மாதாந்திர சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும். இதுகுறித்து பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. மேலும் ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு உடனடியாக ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க வேண்டும். பேறுகால ஊதியம் கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளது. இதனை உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story